பக்கம் எண் :

11

1
தமிழ்


தமிழ் பாஷைக்கு ஓர் புதிய நிகண்டு வேண்டும். நம் தாய்ப் பாஷையாகிய தமிழ் மொழியானது மராட்டி, வங்காளி பாஷைகளைப் போலச் சமீபத்தில் அதிக விருத்தியடைய வில்லையென்றாலும், கேவலம் முன்நிலையிலேயே இருந்து விடவுமில்லை. மற்றப் பாஷைகளைப் பேசுபவர்களுள் அப்போதைக்கப்போது சில உத்தம புருஷர்கள் தோன்றித் தத்தம் மொழிகளைச் சீர்திருத்தியும் விருத்தி செய்தும் வருவதையே தங்கள் வாழ்நாளின் பயனென எண்ணி முன்னேற்றமடையும் மார்க்கத்தைத் தேடுகிறார்கள்.

நமது பாஷையிலோ, பண்டிதர்களும், மகா பண்டிதர்களும் நாவலர்களும், புலவர்களும், இன்னும் என்னென்னவோ பட்டங்களைத் தாமாக சூட்டிக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் மாத்திரம் அதிகப்பட்டுக்கொண்டு வந்தார்களே தவிர, அன்னார் பாஷை விஷயமாய் உழைத்துச் சீர்திருத்தியதை மாத்திரம் காணோம். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் சில இலக்கிய இலக்கணங்களைப் பிழை சோதித்து, அக்காலத்தில் தமிழ் மொழியை மூடிக் கொண்டிருந்த இருளையொருவாறு நீக்கினார். என்றாலும், அதனைப் பின்பற்றி, அத்தொழிலை நடத்தி வரும் உத்தம புருஷர்கள் அதிகமாயில்லை. சமீபத்தில் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் பண்டை