நூல்களிற் சிலவற்றை ஆராய்ந்து அச்சிடுவித்தார்களானாலும், நம் மொழியில் அருமை பெருமைகளை நோக்க அவர் ஒருவர் செய்தது போதாதென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நூலாராய்தலும் வெளியிடுதலுமே தம் நோக்கமாகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற சபைகளினால் பொது ஜனங்கள் எவ்வளவு நன்மை அடையலாமென்று எதிர் நோக்கினார்களோ அவ்வளவு நன்மையை அடைந்தார்களில்லை. மற்றும் தமிழ் மொழிக்கண் அக்கரை கொள்ளும் கடமையுடைய மடாதிபதிகளிலோ பெரும்பாலோர் வேறு வழிகளில் திரும்பி விட்டார்கள். இவ்விதம் நம் பாஷையானது தன்னை முன்னுக்குக் கொண்டுவர நாகனற்றுத் தவிக்கும் இக்காலத்தில் அரசாட்சியார் ஒரு லக்ஷ ரூபாய்ச் செலவில் தமிழில் ஓர் விரிவகராதி தயாரிக்க எண்ணங்கொண்டது. தமிழ் மக்களுக்குச் சிறிது சந்தோஷமான சமாசாரமே. ஆனாலும், அவ்வகராதி எழுதி முடிக்கும் கூட்டத்தில் தமிழில் அதிகப் பயிற்சியில்லாத சீமைப் பாதிரிகளும் சேர்ந்துள்ளதினால் அதன் நன்மையும் எதிர்பார்க்கும் அளவு உண்டாகுமாவென்று மேதாவிகள் சந்தேகிக்கிறார்கள். நம் பாஷையின் நிலைமை இவ்விதமிருக்க, அடுத்த வட பக்கத்திலுள்ள தெலுங்கர்களோ தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சபைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அம்முயற்சியின் கண்கூடான பயனாய் இதுவரையும் அப்பாஷையில் இல்லாததான ஒரு தினசரிப் பத்திரிகை தோன்றிச் செம்மையாய் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்ளுகிறார்களா வென்றால், அது மாத்திரமில்லை. நம் தமிழ் மொழியில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொகை நூலாகிய “நிகண்டு” அதன் உற்பத்தி காலத்தில் எவ்விதம் இருந்ததுவோ அப்படியே இன்னும் இருக்கிறது. அதில் ஒரு மொழிக்கு முற்காலத்தில் இரண்டு |