பக்கம் எண் :

13

அர்த்தம் சொல்லப்பட்டிருந்தால் இப்போது அந்த வார்த்தை அரை டஜன் அர்த்தங்களில் உபயோகப்படுகிறது. இருந்தபோதிலும் அந்த அர்த்தங்களை உட்படுத்திப் புதிதாய் வேறு நூல் தயாரிக்க எண்ணினவர்கூட இல்லை. உதாரணமாக, சூடாமணியில், “ஆகவே எலியின் நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர்” என்று ஆகி என்னும் பதத்திற்கு இரண்டே அர்த்தம் சொல்லியிருக்கின்றது. ஆனால் இக்காலத்தில் கொப்பூம், பூனை, பன்றி, சாமரை என்னும் வேறு நான்கு அர்த்தங்களிலும் அதை வழங்குகின்றனர். துப்பு என்னும் பதத்திற்கு “துப்பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை அநுபவர் பேர்” என்று ஆறே பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனை நெய், ஆயுதப் பொது, அறிவு, உணவு, குற்றம், சகாயம், சிவப்பு, துணைக்காரணம், பானம், பொலிவு, மிகுதி முதலிய பின்னும் பன்னிரண்டு பொருள்களிலும் வழங்குகின்றனர். உவமையுருபு அதனில் இருபத்துநான்கு சொல்லப்பட்டிருக்க, இப்போது ஐம்பதுக்கு மேற்பட்டவை வழக்கத்திலிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். அது நிற்க, நிகண்டு நூலின் உபயோகம் தமிழர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிற் பயின்று தேர்ந்தவர்களைச் சுற்றித் திரியும் அகராதியென்றே சொல்லலாம். எந்த வார்த்தைக்கு அவர்களை அர்த்தங்கேட்டாலும் புஸ்தகம் தேடித் திறந்து பார்த்துச் சொல்லும் ஜோலியில்லாமல் நின்ற நிலையிலேயே சொல்லக் கூடியவர்களாயிருப்பார்கள். நம் தமிழ்ப் பாஷையிலுள்ள இந்நூலை ஒப்ப மேல்நாட்டில் எந்தப் பாஷையிலும் நூல்கள் கிடையா. அவ்வளவு அருமையும் பெருமையும் பொருந்திய நிகண்டில் இப்போது புதிதாகத் தமிழ்மொழியில் சேர்ந்திருக்கும் பல திசைச்சொற்களையும் பழைய மொழிகளின் நூதன அர்த்தங்களையும் சேர்க்காமல் பண்டுள்ளது போலவே இன்னும் வைத்திருப்பது நல்லதா? நாவலர் பதிப்பித்த பிரதியில் புதிதாய் வழங்கும் அர்த்தங்களும் சிலவற்றை உரையிற் சேர்த்திருந்தாலும்