அதனால் நிகண்டு பாடம் பண்ணுவார்க்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. தவிரவும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற கொள்கையோடு இலக்கண நூற்கள் வரவரப் புதுப்பிக்கப்படும்போது இந்தத் தொகை நூலையும் புதுப்பிக்க வேண்டியது அவசியமல்லவா? இதைச் செய்து முடிப்பதற்கு அரசாட்சியின் தயவாவது பொருளுதவியாவது இல்லாமல் முடியாதென்பதுமில்லை. பொருட் செலவு அதிகமாகும் என்பதுமில்லை. சில தனித்தனி வித்துவான்களாவது அல்லது சபைகளாவது பிரயாசை எடுத்துக் கொள்ளுகிறதாயிருந்தால் இந்த விஷயம் திருப்தியாய் முடியக்கூடும். பிற விஷயங்களில் முன்னேற்றமடைய விரும்பும் தமிழர் தங்கள் பாஷை நூல்களைப் புதுப்பிக்காமலிருப்பது எவ்வளவு அவமானம்? - கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) ‘சுதேசமித்திரன்’ 26.5.1914 பக்கம் 6-7 குமரி மலர் இதழ்: 1 மலர்: 25 டிசம்பர் 1968 பொங்கல் இதழ் சென்னை. * |