பக்கம் எண் :

112

லாளி முதலாளி என்ற தொந்தமற்ற சர்க்காரை நோக்கி இதைக் கூறுகிறாரா? வெள்ளையர் அரசாங்கத்தை அகற்றி விட முயலும் இவர் அந்த வெள்ளையர் அரசாங்கத்திற்கு யோசனை கூறுவது எப்படி பொருந்தும்? இப்படிச் செய்ய நினைக்கிறேன் - அப்படிச் செய்ய நினைக்கிறேன் என்ற தன்மையிலல்லவா பேச வேண்டும்?

எப்படியாயினும், ஒரு நம்பிக்கை நமக்குண்டு. அய்யாமுத்து அருளிருக்கும் வரைக்கும் தேசத்திற்கும் விமோசனம் உண்டு. அவ்வளவுதான் நம்மால் சொல்ல முடியும்.

இவர் இராமசாமி யவர்களிடம் கூடியோ, வேலையாகவோ இருந்தவரைக்கும் ராமசாமி என்ற பெயரும் சுயமரியாதையியக்கமும் பழமும் சர்க்கரையுமாகவே தோன்றினாலும் தம் எண்ணப்படி நடவாததால் இப்போது வெளிவந்த காரணத்தால் இங்கிலீஷ்காரர் ஊரை விட்டு ஓடப் போகிறார்கள். இதற்கிடையில் தமிழரசினிடம் மாத்திரம் சண்டை போட்டுக்கொள்ளாதிருக்க வேண்டும்.

- I. J.

புதுவை முரசு, 3-8-1931, ப-11.

*