28 ஹிந்தியால் செக்குமாடுகளாக வேண்டாம்
தற்காலக் காங்கிரஸ் கொள்கைகளில் இந்தியாவுக்குப் பொதுபாஷையாக ஹிந்தியை அனைவரும் பயின்று வரவேண்டும் என்பதும் ஒன்று. இதற்காகக் காங்கிரசானது பொதுமக்களின் ஏராள பணத்தில் ஹிந்திப் பிரசாரத்தின் பேரால், பார்ப்பனருக்கு ஆக்கந் தேடிவருவது நாம் அறிந்ததே. நூற்றுக்கணக்கான பாஷைகளை இந்திய மக்கள் தாய் பாஷைகளாக உடையவர்கள். ஹிந்தியும் அவைகளில் ஒன்று. தம் தம் சொந்த பாஷைகளையே கற்காதவர்கள் நாட்டிற் பெரும்பான்மையோர் தமது சொந்தப் பாஷையோடு ஹிந்தியையும் கற்க வேண்டும் என்பது காங்கிரஸ் கருத்து. இந்நாள் வரைக்கும் முப்பது முக்கோடி மக்களுக்கும் நாங்களே பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் பொதுமக்கள் தத்தம் வீட்டுப் பாஷைகளில் பயிற்சிபெறும் மார்க்கத்தில், சிறிதும் முயற்சி கொள்ளாவிடினும், பொதுப்பாஷை வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி ஹிந்தியைக் கற்க வேண்டும் என்று சொல்ல வந்துள்ளார்கள். காந்தியவர்கட்கும் ஹிந்திக்கும் உள்ள தொந்தார்த்தத்தை மாத்திரம் கருதி நாம் மறுக்க வரவில்லை. தமக்கென உள்ள பாஷையையே அறியாதவர்களிடம் அல்லது அறிந்தவர்களிடந்தானாகட்டும், “கற்கவேண் |