பக்கம் எண் :

114

டும்” என்று குறிப்பிடும் ஓர் பாஷையானது தம் வீட்டுப் பாஷையைவிட பற்பல வகையிலும் பயன்தரத்தக்கதாயிருந்தால் வேண்டாமென்பார் ஒருவருமில்லை.

உதாரணமாகத் தமிழர்கட்குத் தமிழ் தாய்ப் பாஷையாகும். அதை அவர்கள் எவ்வாறு மதிக்கிறார்களோ அதே விதம் ஹிந்திக்காரர்களும் ஹிந்தியை மதிக்கிறார்கள். தமிழன் தமிழ் அறிவதோடு ஹிந்தியையும் கட்டியழ வேண்டுமென்றால் அந்த ஹிந்தியில் நூதனமென்ன வென்றுகேட்பது இயல்பு. பொதுப்பாஷை என்ற காரணத்தைச் சொன்னால் இப்போது பொதுப்பாஷையாகவே பரவி வந்து கொண்டிருக்கும் இங்கிலீஷை எதற்காக விலக்குவதென்று அவர்கள் யோசிப்பார்கள். இதற்குக் குறுகிய புத்தியும் ஸ்வயநல உணர்ச்சியுமில்லாமல் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் ஹிந்தியைவிடப் பயனுள்ள பாஷையாக வேறு பாஷையை அவர்கள் கண்ணாற் பார்த்து வருகிறார்கள்; அதுதான் பொதுமக்களைத் துரும்பாக மதிக்கும் கருவத்தையளித்து முட்டிபுகும் பார்ப்பனர்களையும் பார்ப்பன துரைகளாக்கி வரும் இங்கிலீஷ்.

இருக்கும் இங்கிலீஷை அன்னிய பாஷை என்ற காரணம் சொல்லி வேண்டாம் என்பவர் யோசிக்க வேண்டியவை பல விஷயங்கள் உண்டு. பிரஞ்சுக்காரர்கள், இங்கிலீஷ்காரர்கள், அமெரிக்கர்கள், துருக்கியர், ஜப்பானியர் முதலிய நாகரிக தேசத்தினர்கள் தம் தேசத்தில் தமக்கு அன்னியமான பாஷைகளைச் சொல்லிக் கொடுக்கும் பெரிய பாடசாலைகளை வைப்பது தேசபக்தி குறைவாலல்ல. தம் மக்களிடம் உள்ள நல்லெண்ணத்தால்; பொதுமக்கள் எவ்வகையிலாவது உலகறிவும், பல்வேறு மக்கள் கண்ட உண்மையையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தால்.

இன்றைக்குப் பெங்காலி பாஷை நல்ல நிலையடைந்திருப்பதற்கும், பிரஸ்தாப இங்கிலீஷ் அறிவே துணை