செய்தது. இன்றைய தலைவர்களைத் தலைமைப் பதவிக்கு ஏற்றியதும் அதே ஏணிதான். இங்கிருந்து ஓர் இங்கிலீஷ்காரன் புத்தகச் சாலைக்குப் போவோம்; கண்ணை மூடிக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்போம். ஒவ்வொரு வரியிலும் மக்கள் தமது நிலையிலிருந்து ஓரடியாவது முன்னேற்றத்துக்குரிய விஷயங்கள் கிடைக்கும். பிழைப்புக்கு வழி சொல்லும். பட்டினியை நோக்கிப்போகும் ஓர் எழுத்தையாகிலும் அப்புத்தகங்களில் காண முடியாது. தன்னிலையிலிருந்து உலகத்தையெல்லாம் ஒரே நோக்காக நோக்கும் உயர் நோக்கங்கள் அப்புத்தகங்களில் கிடைக்கப் பெறலாம்! திரும்பி வாருங்கள்! தமிழ் இந்தி முதலிய தேசீய பாஷையிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் சோதியுங்கள். இரண்டு வேளை பட்டினி கிடப்பவனுக்கும் அவன் பசிக்கும் வயிற்றைக் கையால் பிசைந்து கொண்டு மோக்ஷத்துக்குப் போகச் சொல்லும். ஒரு வேளைச் சாப்பாடு சாப்பிட்டு வருகிறேன். என்றாலும் பாஷை சம்மதிக்காது மோக்ஷத்தை நோக்கித் துரத்தும். அவசரமாக மலோபாதைக்குப் போகிறவன் இன்ன திக்கை நோக்கி உட்கார வேண்டும் என்பதே போன்ற அரிய விதிகளைப் பேசும். இன்னவன் பிராமணனுக்கும் க்ஷத்திரியப் பெண்ணுக்கும் பிறந்தான் என்பதையறிய முன்னதாகவே அவர்கள் நடவடிக்கைகளைப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கும் படி அருள் புரியும். ஒவ்வோர் எழுத்தும் நம்மால் ஆவதொன்றுமில்லை என்னும் வீராதி வீரரை உண்டு பண்ணும். இந்தியாவை இங்கிலீஷ்காரனுக்குப் பிறகு எவனிடம் ஒப்படைத்தால் பார்ப்பனச் சட்டப்படி ஆளுவான் என்னும் யோசனையைக் கிருபை புரியும். நேயர்களே! ஹிந்தி பொதுப்பாஷையாக இருக்க வேண்டும் என்றும் இங்கிலீஷ் உதவாது என்றும் சொல்லுகையில் ஏற்படும் புரட்டு வார்த்தைகளை நீங்கள் அறிய |