பக்கம் எண் :

123

அப்படியானால் இனிமேல் காலையில் நமக்கு முட்டை ஊற்றிய ஆப்பந்தான்! குறைந்தது எக்கேடு கெட்டாகிலும் குண்டு சட்டி நிறையவாவது பணம் மிச்சமிருக்கும். காலையில் எழுந்தால் வயிற்றுக்கு வழிதேட வேண்டுமே என்ற ஏக்கம் தொலைந்தது! தீர்ந்தது தொல்லை.

ஷெ காங்கிரஸ் பிரசங்கியை ஒருவன் எழுந்து கேள்வி கேட்கிறான்:-

ஆம் ஐயா! கதர் நூல் நூற்கும்படி அனைவருக்கும் கட்டளையிடுகிறீர்கள். அது பணக்காரருக்கு ஏற்ற வேலையாய் இருக்கலாம். அவர்கட்குச் சந்தர்ப்பம் இடம் கொடுக்கும். ஏழைகட்குக் கதர் நூற்பதால் அற்ப வருவாய்தானே கிடைக்கும்.

அதற்கு காங்கிரஸ் வாலா பதில் சொல்லுகிறார்:-

மிகவும் கஷ்டப்படும் நமது பாரத ஏழை மக்கட்குத் தினம் தினம் கதர்நூல் நூற்பதன் மூலம் 2 அணா கிடைத்தால் நலமல்லவா?

இதைக் கேட்டு ஏழை மக்கள் சொல்லுகிறார்கள் :-

அட, காமாட்டிப் பையா! இரண்டணாத்தானா? சுயராஜ்யம் வரும் வரைக்கும் நீ அந்த இரண்டணாவுக்கு நூல் நூற்றுக் கொண்டிரு! அதுவரைக்கும் நாங்கள் உன் போன்றோர் பங்களாவில் உட்கார்ந்து கொண்டு காலையில் தட்டுத் தட்டாய் பலகாரம், செம்பு செம்பாய்க் காப்பி. 10 மணி நாஸ்த்தா, 12 மணிச் சாப்பாடு. 4 மணி நாஸ்த்தா. 8 மணிச் சாப்பாடு முதலியவைகள் அனுபவிக்கிறோமே! நாங்கள் காலை முதல் நூல் நூற்று 2 அணாச் சம்பாதிக்க உடன்பட்டால் நீ சுயராஜ்யம் வாங்கி வருகிறாயோ! நீ சீமைக்குப்போய் படித்துவிட்டு வந்து விடுகிறாய். சர்க்காருக்கு மனுப்போடுகிறாய். சர்க்கார் 200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாய்ச் சொல்லுகிறார்கள். 700 ரூபாய்க்குக் குறைந்தால் வேண்டாம் என்று