அது இயற்கை முறையில் தங்கு தடையின்றி அறிவு வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நிலையில் நம்நாடு மிக உந்நத நிலையை அடைந்திருக்கும்; அறிவின் நேரான பயனாகிய யந்திர வளர்ச்சி பெற்றிருக்கும். நமது தேசம் இடைக்காலத்தில் அறிவுப் புரட்சி பெற்றுவிட்டது. அதனால் அறிவுத் தடங்கலின் நேரான பயனாகவே யந்திர சாதனத்தை அது அடையவில்லை. இக்காரணத்தால் இன்றைய தவிப்பு நிலைமை ஏற்பட்டது. எத்துறையிலும் பிரதேசங்கள் இன்று நல்ல நிலையடைந்திருப்பதற்கு அவைகளின் எந்திர வளர்ச்சிதான் காரணம். அந்த யந்திர வளர்ச்சிக்கும் அவைகள் இயற்கை முறையில் தங்குதடையின்றி அறிவு வளர்ச்சியடைந்ததுதான் காரணம். அவ்வறிவு வளர்ந்து வந்ததற்கும் அங்கெல்லாம் அறிவுப் புரட்சி ஏற்படாததுதான் காரணம். அறிவுப் புரட்சி ஏற்படாததற்கு மதப்புரட்டும், சாதிப் புரட்டும் மிதமிஞ்சிய கடவுள் புரட்டும், மூட பழக்க வழக்கங்களும் அங்கு அதிகமில்லாததுதான் காரணம். இன்றைய நிலையில் எத்துறையிலும் பிற்போக்கடைந்துள்ள நம்நாடு, முன்னேறுவதற்குச் சுலபமான குறுக்கு வழி, யந்திர சாதனத்தை நாம் அடைவதேயாகும். நாம் இந்நாள் யந்திரம் யந்திரம் என்று கூச்சலிட வேண்டும். யந்திர வளர்ச்சிக்கு விரோதமான எக்கூச்சலையும் நாம் ஓங்கவிடலாகாது. இவ்வகையில் காந்தீயமானது இந்நாட்டுக்குச் சாக்குருவி என்பதை ஆயிரம் முறை கூறுவேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிச் செய்ய வேண்டிய வேலையைச் சில மனிதர்களின் சகாயத்திலேயே ஆலை செய்து விடுகிறது. இதனால் மீதியுள்ளவர்க்கெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் உண்டாகிறது. ஆகையால் அவர்கட்குத் தக்ளியையும், ராட்டினத்தையும் கையிற் |