கொடுங்கள் என்ற வார்த்தைகள் வற்றிக் கருகியதான உள்ளத்தில்தான் உண்டாக முடியும். இதற்கு மாறாக, ஆலையில் வேலை கிடைத்தவர்போக மீதியாயுள்ள மக்கட்கு வேலை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று எவராவது சொல்லியிருந்தால் அவரை நான் வீரன் என்றே சொல்லுவேன். அறிவுடையார் என்றே சொல்லுவேன். இந்நாட்டுப் பொதுமக்களிடை அன்னை அன்புடையவர் என்றே சொல்லுவேன். அவர் ஏழ்மைக்கு விடுதலை கேட்பவர் என்றே கூறுவேன். முன்னேற்றத்தை நோக்கிச் சில படியேறி அங்குள்ள யந்திரத்தில் வேலை செய்யும் போது அதில் வேலை கிட்டாவிட்டால் அதிலிருந்து பல படி இறங்கித் தக்ளியைக் கையில் தூக்க மக்களைப் பணிப்பவர் எவ்வகையில் அன்புடையவர்? ஆனால், துணி நெய்யும் ஆலையில் வேலை செய்பவன் நமது நாட்டுப் பஞ்சின் உபயோகத்தைத் தெரிந்து கொண்டான். அதில் வேலை கிட்டாத மற்றவர்கட்கு நமது நாட்டின் பிற பொருளின் பிரயோஜனத்தை ஏன் காட்ட முற்படலாகாது. இதிலல்லவா உண்டு ஏழைமக்கட்கு ஆதரவு? இத்துறையில் நுழைவதல்லவா சமத்வ புத்தி. எல்லார்க்கும் அறிவு வேண்டும். எல்லார்க்கும் படிப்பு வேண்டும். எல்லார்க்கும் இன்பம் பொதுவாக வேண்டும் என்று நினைப்பவன் வேலையற்ற மக்கள் எதனால் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று உண்மைக் காரணத்தைத் தேடவேண்டும். இதைத் தேடும் வகையில் பணக்காரர் தயவுக்கும் வர்ணாச்சிரமப் பித்துக்கும் பங்கம் ஏற்படுவது மெய்யாகும். இவைகளைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்ளவும் வேண்டும்; வேலையற்றவர்களையும் கண்ணை யவிக்க வேண்டும் என்பது யோக்யமாகாது. ஒரு நாடு ஏழைப் பொதுமக்கட்குக் காட்ட வேண்டிய சலுகையை இந்நாட்டு மக்கட்கு இந்நாடு காட்டியிருக்கிறதா? படிப்புண்டா? அறிவுண்டா? ஒருவ |