பக்கம் எண் :

129

ஆரம்பிக்க வேண்டும் என்கிறேன். யந்திர வளர்ச்சியால் உந்நத நிலையிலிருக்கும் இவ்வுலகில் யந்திரத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்கிறேன். தொழிலற்றவர், ஏழை மக்கள் என்பவர் ஆகிய பெரும்பான்மையான இருட்டுக் கிடங்கு மக்களையெல்லாம் ஒன்று சேர்ப்போம். இதில் முட்டுக்கட்டை போடும் வருணாசிரமப் பித்தர் முதலியவர்களையெல்லாம் காறியுமிழ்வோம். பணக்காரர்களையெல்லாம் புறம்போக்குவோம். கீழ் வருமாறு மக்களிடம் சொல்லுவோம்:-

பணக்காரர்களாலும், ஜாதிமதக் கடவுட் பைத்தியக்காரர்களாலும், புரோகிதர்களாலும், மடாதிபதி, சங்கராச்சாரிகளாலும குல்லாய் போடப்பட்டுச் சாகப்போகும் தருணத்தில் இருக்கும் ஓ! ஏழைகளே, அறிவுக்குத் தடை ஏற்பட்டிருக்கும் பெரும்பான்மையோரே! உங்கள் காரியத்தை நீங்கள்தான் கவனிக்கப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். யந்திரங்களைக் கொண்டு நடைபெறும் தொழற்சாலைகளில் ஒன்று விடாமல் நுழைந்து பாருங்கள். வேலை யகப்பட்டவர் போகட்டும். வேலையில்லாத பெரும்பான்மையோர், கங்கை பெருக்கெடுத்ததுபோல் பணக்காரர்களை நெருங்குங்கள். நாட்டின் மூலப்பொருள்கள் தொழிலாளிகளையும் யந்திரங்களையும் எதிர்பார்த்துக் கிடப்பது உங்கள் மூளையில் ஏறவில்லையா என்று அவர்களைக் கேளுங்கள். உங்கள் பணத்தைக் கூட்டி நாட்டுக்கு அதன் மூலம் தொழிற்சாலைகள் உதவுமாறு செய்யலாகாதா என்று கேளுங்கள்.

மூலப்பொருள் இருக்கையிலும் வேலையில்லாத் திண்டாட்டம் உண்டாவதெனில் பணக்காரர்கள் அயோக்கியத்தனம் பண்ணுகிறார்கள் என்று தானே அர்த்தம் என்று கேளுங்கள். தக்ளி, ராட்டினம் இவைகள், பார்த்தவரைக்கும் பிரபுக்கள் தமாஷாவாகச் சுற்ற உதவுமேயன்றி ஏழை