பக்கம் எண் :

130

கட்குப் பயனில்லை என்றும் அதனால் எங்கள் வறுமை நிலைநிறுத்தப்படுகிறது என்றும் சொல்லி அதை அவர்கள் தலையில் போடுங்கள்! நம் நாட்டு மக்களில் அநேகரை அயல்நாடுகட்கு அனுப்பி யந்திரம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து வரும்படி செய்யச் சொல்லுங்கள். வேலைக்காரக் கூட்டம் சாரிசாரியாக வந்து விடுமே - பணக்காரர், வருணாசிரமக்காரர், குருக்கள்மார் இவர்களின் ஆர்ப்பாட்டம் ஒடுங்கி விடுமே என்று அவர்கள் நினைப்பது தெரிந்தால், உங்கள் எஜமானர்களாகிய வெள்ளைக்காரத் துரைகளோடு நீங்கள் சமத்வம் கேட்க நீங்கள் முயல்வது மாத்திரம் என்ன யோக்யதை என்று கேளுங்கள். அப்படிக் கேட்பது எங்களைத் தக்ளி சுற்றச் சொல்லவா என்று கேளுங்கள். தொழிலாளர்களை - ஏழை மக்களைப் பயன்படுத்திக் கொள்ளாத தேசம் இதுவரைக்கும் உருப்பட்டதை நீங்கள் அறிந்ததுண்டா என்று கேளுங்கள். பெரும்பான்மை மக்கள் ஏழைகளாயிருக்கையில் அவர்களை மறந்து காரியம் செய்த பிறர், அப்பெரும் பான்மையோரிடமிருந்து தப்பியதுண்டா என்று கேளுங்கள். எல்லாரும் ஒன்று என்ற கருத்துக்கு மாறுபடப் பேசுவது யோக்கியமா என்று கேளுங்கள். தொழில் துறையையும் கவனிக்காமல் நாட்டுக் கருப்பொருள்களை உபயோகிக்க வழியும் தேடாமல், படிப்பைக் கவனிக்காமல் ஏழைகள் பேரால் சுயராச்சியம் கேட்க ஜாதி சமய வெறிகளை சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று சொல்லும் காந்தீயத்தை - ஏழைகள் தக்ளி சுற்றுவதன் மூலம் அதே நிலையில் வீங்கி வெடிக்கட்டும் என்று சாதியைச் சமயத்தை முதலாளித் தன்மையைக் காக்க முயலும் காந்தீயத்தை சாக்குருவி என்னாமல் வேறென்னவென்று சொல்லுவது என்று தைரியமாய்க் கேளுங்கள்!

இவ்விதமாகத் தொழிலாளரைக் கேட்கச் சொல்லுவதால் உண்டாகும் நிலையானது எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். கவலையுடையவர்களைத் தொழிற் படுத்துவதா? பணக்காரரைக் கையிற்