பக்கம் எண் :

131

பிடித்துக் கொண்டு இன்னும் காந்தீயத்தின் பேரால் கொள்ளையடிக்க விடுவதா? இந்நாட்டில் அந்தோ - வேலையில்லை - பட்டினியே கிடக்கிறார்கள் என்று மேலுக்குப் பேசுவதைப் பார்க்கிலும் அவர்களின் பசித்த உள்ளத்தையும், வேலை கேட்கும் தோளையும் நாட்டுக்கு அநுகூலப் படுத்துவதற்கான யந்திரங்களைக் குவித்துத் தொழிற்சாலைகளைக் குவித்து இதன் விருத்தியாகிய விஞ்ஞானம், ரசாயனம், விவசாயம் முதலியவற்றிலும் நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வருவதல்லவா விவேகம்.

மற்றொரு புதிய ஞாயம் சிலர் சொல்லக்கூடும். மூலப் பொருள் உண்டு. வேலையற்றவர்கள் உண்டு. ஏராளத் தொழிலாளர் உண்டு. இருந்தாலும் லண்டனுக்குப் போய் சுயராஜ்யம் வாங்கி வரும் வரைக்கும் தக்ளியைச் சுற்றச் சொல்லியிருக்கிறோம். சுயராஜ்ய இந்தியாவில் ஏராள விஞ்ஞானம், யந்திர சாஸ்திரம், தொழிற் படிப்பு இவைகளை உண்டாக்கி, மூலப் பொருட்களையெல்லாம் நாட்டுக்குப் பயன்படுத்துவோம் என்றும் அப்போது ராமராஜ்யம் தானே வந்து விடும் என்றும் சிலர் சொல்ல வரலாம்.

பணக்காரரும் வைதிக வெறியரும் ஏழைத் தொழிலாளர்கட்கு மனம் வந்து தாமாகச் சமத்வம் கொடுத்ததென்பதும் - கொடுக்கக்கூடும் என்பதும் இதுவரையில்லை. இனியுமிருக்கப் போவதுமில்லை. அடிமை ராஜ்யமென்பது பணக்கார ஆளுகைதான். வைதீகர் ஆளுகைதான். பணக்காரர், வைதீகர் சுயராஜ்யம் பெற்று, அதைத் தாம் பார்த்து வழங்குவதை ஏழைகள் பெற்றுக் கொள்வதென்பது கூடாது.

பாட்டுக்காரன் பாட வேண்டும். ஏழைகள் பக்கவாத்யம், பின்பாட்டு, சபாஷ் கூச்சல் போட வேண்டும். பாட்டுக்காரன் பணம் பெற வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குத் தர வேண்டும்; அதுவரை பாட்டுப் பாடுவதி