பக்கம் எண் :

134

பல பாஷைகள் ஒரு பாஷைக்காரரிடம் இருப்பது தீமையல்ல என்கிறார். தமிழையே படிக்காதிருக்க வகை தேடப்பட்டிருக்கும் தமிழரிடம் ஆபாசக் களஞ்சியமான இந்தியொன்று வந்து சேருவது மகா கெடுதி.

இந்தி, மற்ற பாஷைகட்கு விரோதமாகப் புறப்பட்டிருக்கிறது என்போர் இந்திய தேசீயத்துக்கும் ஒற்றுமைக்கும் விரோதியாவார் என்கிறார். உமது இந்திய தேசீயமும், உமது ஒற்றுமைச் செயலும், அவற்றிற்கு நேர்மாறான பயனை விருத்தி செய்வன என்று சொல்லுபவர்க்கு இந்திப் பிரசாரம் முழுப் புரட்டு ஆகும்.

ஆங்கிலத்தால் நன்மை ஏற்படவில்லையென்று நான் சொல்ல வரவில்லை என்கிறார். நீங்கள் மகாத்மாவின் நண்பராயிற்றே. சொன்னால் என்ன? சும்மா சொல்லுங்க சாமி.

இங்கிலீஷ்மேல் நமக்குத் துவேஷமில்லை என்கிறார். யார் அப்படிச் சொன்னது? இப்போதே இங்கிலீஷ் அறிவால் காந்தியாரின் (தோழர் குருசாமி (பி.ஏ) சொல்வது போல்) அபின் பிரசாரத்தையும், மற்றும் வைதிகரின் தர்பார்களையும் பொதுமக்கள் ஆக்ஷேபிக்கிறார்கள். இங்கிலீஷ் பொதுப் பாஷை ஆக்கப்படுவதன் மூலம் அதிக பிரசாரம் செய்யப்பட்டால் ஏழை மக்களிடம் தக்ளியைத் தூக்கிக் கொடுப்பதை முழுதும் வெறுப்பார்கள் என்று தான் இங்கிலீஷ்மேல் கோபம். துவேஷமென்று யார் சொன்னது?

இங்கிலீஷ் பொது பாஷையாக்கச் சௌகரியப்படாது என்கிறார். அது எப்படிச் சௌகரியப்படும்? துளசிதாஸ் ராமாயணத்தைக் காட்டி இந்தியைப் பரப்ப மாத்திரம் சௌகரியம் உண்டு. வருணாசிரமம் என்பதில்லாத இங்கிலீஷை எப்படிப் பரப்ப முடியும்?

இங்கிலீஷிலேயே நமது கவனம் செல்லக் கூடாதே என்பதுதான் எனது கவலை என்கிறார். இங்கிலீஷைப்