பக்கம் எண் :

142

35
“குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்”


(கிறுக்கன்)

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்” என்ற பழமொழியை நான் கண்டு பிடித்துச் சொல்லவில்லை; அல்லது எனது சுயமரியாதைத் தோழர்களும் சொன்னதல்ல. இதைக் கூறியவர்கள் காலஞ்சென்ற நமது மூதாதையர்களாவர். ஆகவே இதை ஆத்திகர்களும், வைதீகப் பெரியார்களும், பழமையைப் போற்றும் அன்பர்களும் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இந்தப் பழமொழியை ஆராய்வோம். குழந்தையும், தெய்வமும் கொண்டாடுகிறவர்களிடத்திலேயே நெருங்கும் என இந்தப் பழமொழி பகர்கிறது. அப்படியானால் குழந்தையையும், சாமியையும், கொண்டாடாமல் இருந்து விட்டால், அவை நம்மிடம் அணுகாதென மறைமுகமாகத் தெரிகிறதல்லவா? ஆம்! இஃது முற்றிலும் உண்மையாகும். இப்போது ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள்! அந்தக் குழந்தையை அன்பாகப் பேசி இன்பமாக விளித்து “இப்படிவா தங்கம்! மிட்டாய் வாங்கித் தருகிறேன்; பொம்மை வாங்கித் தருகிறேன். ரயில் வண்டி வாங்கித் தருகிறேன். கோபால் கடைக்கு அழைத்துப் போகிறேன். மோட்டாரில் ஏறிப் போகலாம். ஓடிவா! என் தேனே! என் கண்மணியல்லவா நீ! எங்கே! இப்படி வருவாயாம்! உன்னை நான் தூக்கிக் கொண்டு கடைக்குப் போவேனாம்!...” என்பதைப் போன்ற