பக்கம் எண் :

143

வார்த்தைகளைச் சதாகாலமும் குழந்தைகளிடம் பிரயோகித்து அவர்களைக் கொண்டாடினால், அந்தக் குழந்தைகள் பலாப்பழத்தில் ஈ ஒட்டிக் கொள்வது போலத் தம்மைக் கொண்டாடுகிறவர்களிடம் ஒட்டிக்கொள்கிறார்கள். இது அநுபவம். குழந்தைகளைக் கண்டால் ‘சின்’ என விழுந்து ‘சீ, நாயே! என்கிட்ட வராதே! அடிப்பேன்! உதைப்பேன்! கடிப்பேன்! எனப் பேசினால் அதைக் கேட்கும் குழந்தை எப்படிப்பட்ட ஆளாயிருந்தாலும் நெருங்கவே நெருங்காது. அப்படிக்கில்லாமல் குழந்தைகளிடம் பட்சமாகப் பேசாமல், சும்மாவிருக்கின்றவர்களிடத்திலும், அதாவது குழந்தையைக் கொண்டாடாமலும் அல்லது கவனிக்காமலும் சும்மாவிருந்தாலும் குழந்தைகள் நெருங்கா. கொண்டாடுகிறவர்களிடத்தில் மட்டுமே அவை அணுகுவது சகஜமாயிருக்கிறது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதென்று நினைத்து நான் சொல்ல வரவில்லை. ஒருவேளை தெரியாதவர்கள் ஒருவர் இருவர் இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் இவ்வளவு தூரம் சொல்ல வந்தேன். எல்லோரும் தெரிந்திருப்பவர்களாயிருந்தால் அது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. எப்படியெனில் நான் கூறுவது சரி அல்லது சரியல்ல என்பது பட்டப்பகல் போல தெரிந்து கொள்வீர்களல்லவா? ஊம்! அதனால் தான் நான் கூறினேன்!

“குழந்தைகளும் எப்படியோ அப்படியே சாமிகளும்” என்றார் மண்டை பெருத்த பெரியார். மாரியாயி, காளியாயி, கருப்பண்ணசாமி, சனீஸ்வரன் முதலிய சாமிகள்தானாகட்டும்; வேறு எந்தப் பெரிய கடவுள் தானாகட்டும், அவர்களை ஒருவரும் கொண்டாடாமல் இருந்தால் போற்றாமலிருந்தால் - மதிக்காமலிருந்தால் அவர்களும் ஒருவரையும் மதிக்கமாட்டார்கள். நெருங்கமாட்டார்கள் என்றே மேற்படி பழமொழி விளக்குகிறது. எடுத்துக்காட்டாக இந்து மதத்தை சேராத மற்ற மதங்களில் இருப்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மாரியாத்தாளையோ, காளியம்மாளையோ, மற்ற இந்துக் கடவு