பொறுப்பு, விவேகம், ஒற்றுமை முதலியவைகளையுடைய குடும்பத்தினர்முன், குடும்பத்தைச் சேராத பிறன் தலையிட முடியாதது போலத்தான் ஒப்பு, உடற்பிறப்பு, விடுதலை முதலிய குண ஆவேசமுடைய தேசத்தில் பிறன் தலையிட முடியாது. அத்தகைய குடும்பத்தில் தலையிட்ட பிறன் தாக்குப் பிடிக்க முடியாதது போலத்தான் ஒற்றுமையும் சமத்வமாதி குணங்களின் ஆவேசமும் உள்ள தேசத்தில் தலையிட்ட பிறனும் தாக்குப் பிடிக்க முடியாது. உணவைவிடக் கல்வி ப்ரதானம் என்று நினைத்துச் செய்கையில் காட்டிவரும் இன்றைய உலகில் பொதுக் கல்வியைப் பற்றிக் கவலை கொண்டதுமில்லை. சுயராஜ்யம் என்ற கூச்சல் 35 கோடி மக்களின் காதிலும் அர்த்தமற்ற முறையில் குருட்டுப் பாடமாகப் புகுத்த முயலும் ஒரு சிலரின் அபார சக்தியைக் கல்வியின் தேவைக்கு எப்போதாவது எங்காவது இந்நாட்டில் உபயோகிக்கப்பட்டதா என்ற விஷயத்தை உற்று நோக்கினால் மனம்திடுக்கிடுகிறது. ஓய் தலைவனே! நீ உன் சட்டைச் சாக்கிலிருந்து தரத்தக்க சமூகச் சீர்திருத்தத்தை இப்படிப் போடு என்று ஓர் திருத்தத்தை வேண்டுகின்ற ஏழைச்சகோதரன் கேட்டால் அந்தத் தலைவன் இன்னொரு பலசாலியைப் பொறுத்த பிரச்னையைத் தீர்த்துக் கொண்டு அதன் பிறகு ஆகட்டும் என்று கூறுகிறான். பலசாலிப் பிரச்னையானது மேற்படி தலைவனும் மேற்படி ஏழைச் சகோதரனும் ஒன்றுபடுவதன் மூலமே தீரக்கூடும் என்பதை அவன் சிந்திக்க மறுக்கிறான். குடும்பத் தலைவன் தன் உறவினர்களின் நெஞ்சை மிதித்தபடி குடும்ப விரோதியை உறவினர் சகிதம் எதிர்ப்பதென்பதுதான் எப்படி முடியும் என்று தோன்றவில்லை. சுயமரியாதை இயக்கம் சொல்வதென்ன? தேச விடுதலை ஒன்றே மற்றெல்லாவற்றிலும் ப்ரதானம் என்கிறது. அத்தேச விடுதலைக்கு இன்றியமையாததான ஒற்றுமை பிரதானம் என்கிறது. ஒற்றுமையே பிரதானம் என்று சொல்வ |