பக்கம் எண் :

149

ஏதோ காங்கிரஸ் என்பதன் பேரால், சுயராஜ்யம் என்னும் குறிநோக்கி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கிடையில் ஏற்பட்ட தொல்லைகளை அறிந்தாய்விட்டது. தொல்லை அடையும் சமயத்தில் இயல்பாக அந்தத் தொல்லைகட்குக் காரணம் என்ன என்று தேடப்படும். அவ்வாறே கூர்ந்து கவனித்தவகையில் சுயமரியாதைக்காரர் கூறும் தேசக் குறைபாடுகளே காரணம் என்பதும் புலனாயிற்று. தேசமக்கள் இதுமுதல் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தேச விடுதலை பெற என்ன தடை?

புதுவை முரசு, 22-2-1932 முழக்கம்: 2 ஓச்சு: 14

பக்கம்-16, 17

*