பக்கம் எண் :

150

37
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்


வாழ்வு என்பது உயிர் வாழ்தல். அது பிறப்பு இறப்பு இரண்டின் இடையில் உள்ளது. வாழ்வின் பயன் என்பது இன்ப வாழ்வு வாழ்தல்; இதன் மற்றொரு முனை துன்ப வாழ்வு. உயிர்கள் இயல்பாக விரும்புவது இன்ப வாழ்க்கையே. துன்ப வாழ்க்கையே உயிர்களுக்கு எட்டிக்காய்.

“இன்ப வாழ்வையடைய வழி எது? ”

இது உலக மக்களின் பெரும்பான்மையோரின் கேள்வி. சமத்வம், சகோதரத்துவம், சுதந்திரம் ததும்பும் உள்ளம் வேண்டும். அதன் பிறகு வெற்றி. அதன் பிறகு இன்ப வாழ்வு.

இன்னொரு முனை நமக்குத் தெரிந்ததுதான். பேதம்- விரோதம்-பந்தம் இவை உள்ளத்தில் இடம் பெற்ற நிமிஷத்தில் எட்டிக்காய் வாழ்வு வந்து சேரும். அரசு, அன்றி ஓர் ஏழைக்குடி; இருவரும் மனிதர். மக்களின் சந்தர்ப்ப பேதத்தால் ஏற்படும் நிலையை நீக்கிப்போட்டு அனைவரும் மக்கள் என்று கொள்ளும் தன்மை ஒப்ப வேண்டும். சமத்வம் - ஒப்பு இரண்டிற்கும் ஒரே அர்த்தம்.

உலகம் ஒரு தாய், உலக இன்பம் தாயின் திருமுலைப்பால், பாலுண்ணத் தாவும் மக்களின் மாறுபடாத மனோபாவம் - உடன்பிறப்பு எனப்படும். சகோதரத்துவம் - உடற்பிறப்பு இரண்டுக்கும் ஒரே அர்த்தம்.