பக்கம் எண் :

151

உலகம் பொது. உலக இன்பம் பொது. மக்கள் தமக்குரிய இன்பத்தை அடைய தடங்களின்றி விடுபட்ட தன்மை விடுதலை - சுதந்திரம்.

ஒப்பு - உடற்பிறப்பு - விடுதலை! நினைத்துப் பாருங்கள் - இந்நிலை யடைந்த மக்கள் இன்ப வாழ்க்கையின் எல்லை காண்பவர். ஒரு தன்மை வாய்ந்த மக்கள்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது மாறு, மாறு என்பது பேதம். “தனக்குண்டு பிறருக்கில்லை” இது பகை - பகை - விரோதம். மனிதன் மனிதனுக்குக் கட்டுப்படல் கட்டு; கட்டு - பந்தம்.

மாறு - பகை - கட்டு இவைகளில் அகப்பட்ட மக்களின் நிலை துன்ப வாழ்வு. அது சாக்காட்டின் ஒட்டு. மக்களுக்கு ஏழ்மை ஒரு சந்தர்ப்பம். செம்மை ஒரு சந்தர்ப்பம். எழுச்சி ஒரு சந்தர்ப்பம். சோர்வு மற்றொரு சந்தர்ப்பம். அறிவு மலர்ச்சி, அறிவு மழுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்கள்!

மக்களின் ஏழ்மை செம்மையாதல் உண்டு. சோர்வுற்ற உள்ளம் எழுச்சியடைதல் உண்டு. மழுங்கிய அறிவு ஒளிபெறுவதுண்டு.

“பண்டைப் பிராஞ்சு தேசம்” - அவள் தன் முக்காலே மூன்று வீசம் பங்கு மக்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாள். பிரபுக்கள், அரசச் செல்வாக்குடையவர்கள், எதேச்சாதிகாரிகள், ஏழை மக்கள் மேல் ஆழ உட்கார்ந்து கொண்டனர். பேதம் - விரோதம் - பந்தம் தலைவிரித்தாடின. சமூகம் செத்துப்போக விட்டாலும் சாக்காட்டுக்கு ஒரு நூல் இடைவெளி தான் பாக்கி.

“செத்துத்தான் போவதா? ” சாவதற்குமுன் அவர்கள் தமக்குள் இக் கேள்வியைக் கேட்டுக் கொண்டார்கள். பேதம் - விரோதம் இவைகளை விலக்கி ஒன்றுபடுவதா? இதற்குப் பிரெஞ்சு மக்கள் எல்லோரும் ஒத்துக் கொண்