பக்கம் எண் :

152

டனர். கட்டை விலக்க எழுவதா? உடனே ‘ஆம்’ என்றனர். ஏழை மக்கள் அனைவரும். அதிகாரச் செருக்குடையவர்களுக்கு ஓர் இறுதிக் கடிதம் தயாரித்தனர். இதை அவர்களின் புழுங்கிய உள்ளம் கொண்டு போயிற்று. ஏழைகளின் இவ்வெண்ணத்தை அதிகாரங் கொண்டவர்கள் கவனிக்கவே யில்லை.

“எமக்குள் பேதம் தீர்ந்தது! ஒப்புடையவர்களாய் விட்டோம். விரோதம் தீர்ந்தது. நாங்கள் அனைவரும் சகோதரர். விடுதலையடைந்தோம். இதற்குக் குறுக்கில் படுக்கும் கிறுக்கர்களே திருந்துங்கள்! உம்மைக் காத்துக் கொள்ளுங்கள்.

எழுச்சியுற்ற உள்ளம் இந்த நிலைக்கு ஏறியது- இந்த பெந்நத்த நிலையை ஆளுர்................. பிராஞ்சு மக்கள் இன்ப வாழ்வில் குதித்தனர். மக்களின் உள்ளம் - சமத்வநிலை - சகோதரத்வநிலை - சுதந்திர நிலையடைய வேண்டும். வெற்றி கிடைக்கும். இன்ப வாழ்வடையலாம்.

பிராஞ்சு தேசத்து மக்கள் தங்கள் விழி பிதுங்கும் நேரம் - ஏதுமற்ற மண்ணாகப் போகும் நேரம்! அதிகாரக் கிறுக்குகள் தலையில் ஏறி அழுத்தும் நேரம்! இப்படிப்பட்ட நிலையிலா அவர்கள் சமத்துவ, சுதந்திர, சகோதரத்துவ நிலையை அடைந்தனர்? நம்ப முடியுமா?

ஆம். அந்த அந்தஸ்தே - இம்மூன்றும் முளைத்துச் செழிப்புற ஏற்றது. அந்த நிலைமையில்தான் இம்மூன்று பிராஞ்சியர் உள்ளத்தில் முரசொலித்தன. அதானால்தான் வெற்றி; அதனால்தான் இன்பம். வேறு பேச்சில்லை. நீயும் உன் உள்ளத்தும், வெளியிலும் பேதத்தை ஒழி, சமத்வத்தை ஆக்கு, விரோதத்தை அகற்று. சகோதரத்துவத்தைக் கொள்! பந்தத்தை நீக்கு! விடுதலை கொள். இம் மூன்று நிலையும் நீ கையை நீட்டி பெறத்தக்க பொருள் என்றுகூட நினைத்திருக்கக் கூடும். மக்கள் உள்ளம் இம் மூன்று வகையான நல்ல நிலையை அடைந்தால் இன்பம் அடைவார்கள் என்பதைப்