பிராஞ்சியர் பழஞ் சரித்திரம் நன்றாக விளக்கிக் காட்டுகிறது. மேலும் அவர்கள் இன்று நமக்கு அனுபவ பூர்வமாகச் சொல்லுகிறார்கள். “நாம் எல்லோரும் சமம் - சகோதரர்; நம்மில் ஒருவருடைய உரிமையை மற்றொருவர் மறுப்பதில்லை” இந்தக் கோட்பாட்டின்படி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களின் சந்தர்ப்ப பேதத்தை எடுத்துக் கொண்டு அது அவர்களின் கோட்பாட்டின்படி குற்றம் என்று சொல்ல வரலாம்; ஆனால் சமூகத் திட்டமே அங்கு ஆட்சி முறை. பிராஞ்சு நாடு - நண்புமுறையில் தன்னையண்டிய ஏனைய சமூகத்துக்கும் - “இந்த மூன்றையும் உங்கள் நெஞ்சில் ஏற்றுங்கள்; அனைவரும் சமம்; அனைவரும் சகோதரர்; நீங்கள் உரிமையுடைவர்கள்; வாழ்ந்து போங்கள்” என்று தான் சொல்லுகிறது. இதை – உலகம் தொடங்காத முன்னமே வாழத்தெரிந்து கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் பிராஞ்சிந்திய சமூகத்துக்கும் சொன்னது – சொல்லி வருகிறது. “நாயைப் போல் கடித்துக்கொள்கிறார்கள்” இந்த வரியில் முதலெழுத்தைச் சொல்லுமுன் கோபித்துக் கொள்ளும் பிராஞ்சிந்தியர்கள் இன்னும் உருப்பட்டபாடில்லை செம்மை வாழ்வு எங்கிருந்துண்டாகும்? பிராஞ்சு குடியாட்சியில் - பிராஞ்சிந்தியக் குடிகள் அங்கம் வகிக்கிறார்கள். தலைநாடு அங்கும் இந்தியா இங்குமாக இருக்கின்றன எனினும், நல்ல எண்ணத்தோடு பிராஞ்சு மக்கள் சகோதர இந்தியர்களே; நீங்கள் எங்களைப் போலவே ஒன்றுகூடி ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களே உங்கள் ஆட்சி முறையில் சட்டங்கள் - சட்டங்களாகட்டும்” என்றனர். பிராஞ்சு குடியரசு வாழ்க! பிராஞ்சியருக்குப் பிராஞ்சு குடியரசு காட்டத்தக்க தயை அனைத்தும் காட்டியிருக்கிறது. பிராஞ்சிந்தியர் அதைத் தக்கபடி |