வரவேற்க முடியவில்லை. ஏன்? அவர்களிடம் அளவு கடந்த பேதங்கள்! அளவு கடந்த விரோதங்கள்! அளவு கடந்த பந்தங்கள்! கண் விழிக்க முடியாத அவஸ்தையில் அடிமை நிலையில் சலுகையுமற்றிருந்த பண்டைப் பிராஞ்சியர்க்கு -இன்ப வாழ்வையளித்த சுதந்திரம் சமத்வம் சகோதரத்வங்கள் ஓர் வல்லரசின் தயையுடைய - சலுகையுடைய - இந்தியர்களுக்கும் பயன்தராத நிலையில் இருக்கின்றன. பேதங்கள் விரோதங்கள் பந்தங்கள் இவ்விந்தியர் நெஞ்சில் ஆழ வேரூன்றிக் கிடக்கின்றன. ஆதலின் பிராஞ்சிந்தியர் நெஞ்சில் அந்தச் சமத்வாதி முக்கொள்கைகளும் தாராளமாக இடம் பெற வேண்டும். அவற்றிற்கு நேர்மாறான பேத விரோத பந்தங்கள் அகல வேண்டும், பிராஞ்சிந்தியர்களே! மற்றும் இந்தியர்களே! உலகு தொடங்கிய நாள் முதல் இன்றுவரைக்கும் - உருவமோ - அருவமோ, உருவமோ உண்மையோ இன்மையோ அன்றிச் சட்ட வடிவமோ இன்னபடியென்று சதகோடியில் ஒரு பகுதியேனும் - ஓரிடத்தும், ஒருவனாலும் கண்டறிந்தில்லாததைக் கடவுள் என்று சொல்லி - இதில் இரண்டு இலக்ஷ்யம் ஆக்ஷேப சபாதானம் கிளப்பி - பாரமார்த்திகப் பேரால் பிள்ளைகள் பெண்டுகள் உறவினர் தேசத்தோரின் நிலையையும் கவனிக்காமல் நெஞ்சை உழலவிட்டு - மற்றும் அக கடவுளுக்கு - ஆயிரம் திருநாமம் சூட்டி அதற்குக் கல்யாண குண கணங்கள் கற்பித்து இந்நாள் மட்டும் தகவலில்லாத பொருளுக்கும் - கோடிக்கணக்கான பொருளை செலவிட்டுக் கோயில் கட்டிப் பார்த்துச் செய்ததுபோல் உருவச் சிலைகள் உண்டாக்கி - அதற்கும் உனக்கும் தரகர்களை நியமித்துத் தரகர் மூலம் படையலிட்டுத் தரகுக் கூலியுடன் சொத்தைப் பறிகொடுத்த உடல் - உயிர்களையும் அதற்கே தத்தம் என்று சொல்லிச் சொந்த நாட்டின் முன்னேற்றத்தில் கருத்தின்றிக் கிடக்கிறீர்கள் அதுவன்றி - |