பக்கம் எண் :

155

அந்தக் கடவுள் நேரில் வந்து வேதம் எழுதியதாகவும்- பிறகு அவரே பல படியாய் அவதாரம் செய்து வேதாந்தம் உபநிஷத்துக்கள் - இதிகாசம் - புராணம் எழுதியதாகவும் சொல்லுகிறீர்கள்.

மேலும் அக்கடவுள் மக்களுக்கு ஏற்பாடு செய்த இத்தொல்லைகள் போதாவென்று பலபல மதங்களை ஏற்படுத்தினதாகவும் நினைக்கிறீர்கள். இதனால் மக்களின் அறிவு விருத்திக்குப் பாடுபட வேண்டிய பண்டிதர்கள் உம்மிடம் மிகுந்த பொருளையும் பறித்துக் கொண்டு மேலும் மேலும் இத்தகைய கடவுள் பேரால் நூல் எழுதும் நிலையை உண்டாக்குகின்றீர்கள். நீங்கள் மாத்திரமின்றி ஆரியருடன் கலப்பற்று வாழ்ந்து வந்து பச்சைத் தமிழர் காலம் சிறிது போக மற்றையதான - இத்தனை நீண்டகாலமாய் நாட்டில் பிறந்து இறந்த உங்கள் மூதாதையர்களும், இவ்வாறே நம்பி நம்பிச் சமூகத்தை ஏற்றமற்ற நிலைக்குக் கொண்டு வந்தனர். நீங்கள் இந்நாளில் கண்ணுக்கெதிரில் உம் பழக்க வழக்கத்தின் பயனைக் கண்டு உணர்ந்தும் அதை நீக்க வேண்டும் என்பாருக்கு உமது மூதாதைகள் அவ்வாறு நடந்து வந்ததால் சுகமாயிருந்ததாகவும் சொல்லி விடுகின்றீர். லௌகீகம் ஒழுங்குபடாத உங்களைச் செல்லரித்த துரும்புகள்போல் நீங்கள் ஆக்கி வருவதை உணராமல் வேத சம்பந்தமான வைதிகம் பேரால் இரவு பகலாய் மெலிந்து போகின்றீர்.

தேச மக்கள் சம்பந்தமான பொதுப்பணியில் சிறிதும் கவனம் செலுத்தும் விசால புத்தியை அடைய உமக்குச் சிறிதும் அவகாசம் இல்லாத நிலையை நீங்களே உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். மேலும் இங்கு கூறிய கடவுள் விசயங்களே - இனிக் கூறப் போகும் பேதம், விரோதம், கட்டு என்ற துன்ப வாழ்வை நிலைப்படுத்திக்கொண்டு அதிலிருந்து உம்மை விடுபடாதபடி செய்துவருகின்றீர்கள்.

மதம் என்ற பொய் விசயத்தால் இறுகக் கட்டுப் பட்டிருக்கிறீர்கள். அதனால் சமூக விரோதம் உண்டாக்கு