கின்றீர்கள். பேதம் வளர்க்கின்றீர்கள். சாதியென்னும் பொய் விஷயத்தால் கட்டுப்பட்டிருக்கின்றீர்கள். அதனால் விரோதப்படுகின்றீர்கள்; பேதப்படுகின்றீர்கள். மனித சமூகத்தில் சேராத மனிதர் என்று சிலரைக் கண் மூடித்தனமாய்ச் சொல்லுகின்றீர்கள். மனிதரே தொடத்தகாத மனிதர் உண்டென்று அறிவற்ற விதமாய்ப் பேசுகின்றீர்கள். பார்ப்பனன் உயர்வு என்கிறீர்கள். க்ஷத்திரியன் இரண்டாம் எண் என்கிறீர்கள். வைசியன் அதன் அண்டைப் படி என்கிறீர்கள். சூத்திரன் கடைசி என்கிறீர்கள். பஞ்ச மன் என்கிறீர்கள். இன்றைக்கு மாத்திரமின்றி இவைகளை உண்டாக்கியதாகச் சொல்லும் பிரமா ஒருவன் இருந்தால் அவன் காலத்திலேயே இவை சுத்தப் பொய் என்பதைச் சிந்திக்க மறுக்கின்றீர்கள். இந்த நிலையில் சுதந்திரம் சமத்வம் சகோதரத்துவம் இவைகள் உமது இதயத்தில் இடம் பெறுவதெப்படி? அந்தோ பேதங்கள்! விரோதங்கள்! பந்தங்கள்! நீங்கள் பிராஞ்சியர் சலுகையும் பெற்ற - இந்தியர்களையோ ஏனை இந்தியர்களையோ உம் எதிர்முனைக்கு - இன்ப வாழ்வுக்கு – அனுப்புவீர்களா? நீங்கள் வீழ்க! சமத்வ சகோதரத்வ சுதந்திரம் வாழ்க! குடியரசு வாழ்க! புதுவை முரசு, மார்ச்சு, 1932 * |