செத்துப்போனவனைக் குறித்து மகன் எது செய்தும் பயனில்லை என்றும், பயன் உண்டு என்றால் மகன் செய்வதை மகள் செய்தாலும் குற்றமில்லையென்றும் நம்மவர் எண்ணும் வரைக்கும் ஆடவர் பெண்கள் சமத்துவம் உண்டாகாது.   மகன்தான் சொத்துக்குரியவன்; மேலும் தந்தைக்குப் பின் உள்ள கிழவிகளைக் காப்பாற்றத் தக்கவன் என்னும் இக் கொள்கையோவெனில் பழங்காலத்தில் பெண்களுக்குக் கல்வியில்லாமல் அவர்களை மரக்கட்டைகளாக்கி வந்ததின் பயனாய் ஏற்பட்டது. மகள் சொத்துக்குரியவள் ஆகும் நிலையை நாம் உண்டாக்க வேண்டும். இதனால் கிழவிகள் கௌரவமாகக் காப்பாற்றப் படுவீர்கள்.  எந்தப் பெற்றோரும் மகனுக்குக் கல்வி தேடும் அத்தனை அக்கறையை மகளுக்குக் கல்வி தேடுவதில் செலுத்துவதில்லை.  மகன் கல்வி கற்றால் பணம் சம்பாதிப்பான் என்று மாத்திரம் நினைக்கிறார்கள். மகள் கல்வி கற்றும் சம்பாதிக்க முடியும். அன்றியும் கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டுமா? அறிவு பெறுவதற்கே கல்வி கற்பது. பெண்கள் கல்வி கற்றால் அறிவு பெற்றுத் திகழ்வார்கள்; வாழ்க்கைத் துணையாவார்கள். மேலும் அறிவுடையவள் பிள்ளையைப் பெறுவாள்; பண்படுத்தாத நிலத்தில் விழல்தான் முளையும் - கோரைதான்.  “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றும் எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.” - பாரதியார். ஆண்களைப் பெற்றால் தன் பேரைச் சொல்லுவான் என்று தந்தை சொல்லுவது வழக்கம். அதாவது மகனைக் கண்டுதான் இவன் இன்னார் குமாரன் அல்லவா என்று பிறர் நினைப்பார்களாம்! இது - மகள் ஒரு   |