பக்கம் எண் :

160

பொதுவாக மதங்கள் அனைத்தும் உங்களைப் போன்றவர்களாலேயே அழிந்து போகும் என்றால் எங்கள் மதம் மாத்திரம் அழியவே அழியாது என்கிறார். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் யேசுநாதர் அப்படிப்பட்ட வல்லமை உடையவர் என்கிறார். மற்ற மதத்துக்குடைய மகத்துவம் பிரம்ம விஷ்ணு சிவன்களும் மாத்திரம்’ கையாலாகாதவரா என்றால் ஆம் என்கிறார். யேசுநாதர் முதல் எல்லாக் கடவுள்களையும் குஸ்திக்கு விட்டுப் பார்த்தீரோ என்றால் போ போ அதிகம் பேசாதே என்கிறார். நான் வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தேன்.

என்ன ஐயா இது! இந்த சாமியார் “பிள்ளைகள் பாரியடிக்கும்போது பாயும் ஒருவனை எந்தப் பக்கமும் போகவிடாமல் கட்டுகின்றவனைப்போல் மனிதனை மனிதனாக வளைக்கிறார். மனிதனில் முதல் லீஸ்டில் முதல் லீஸ்டாக வந்து வணங்குகிறார். கறுப்பர்களை வெள்ளைக்காரர்களாக வந்து வளைக்கிறார். கோவில் பக்கம் திரும்பினாலோ திடீரென்று சாமியாராக வந்து வளைக்கிறார். இன்னொரு பக்கம் நுழைந்தாலோ சாயகால்காரராக வந்து எதிர்க்கிறார். என்ன ஐயா இது! பல பக்கத்திலும் பல ரூபமாய் வந்து எதிர்ப்பதால் பல வகையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்து பணந்தானே நமக்கு நஷ்டம்? இவர்களால் கடலொட்டு மைதானத்தில் விளையாடும் பந்தாட்டத்தில் அந்தப் பந்தை ஜெயம் கிடைக்கும் வகையில் புரட்டக் கூட முடியவில்லை.

என்ன ஐயா இது! இவரைப் பற்றி என்ன சொன்னாலும் கடவுளைச் சொல்லிவிட்டதாக சண்டைக்கு வந்து விடுகிறீர்களே?

புதுவை முரசு, மார்ச்சு, 1932

*