பக்கம் எண் :

167

ஆகவே ஏதேனும் தப்பு தவறு இருந்தால் அதற்கு தாங்கள் ஜவாப்தாரி என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். தங்களுடைய தந்தையின் பெயர் எனக்குத் தெரியாது. ஆதலால் “பரமசிவன் அவர்கள்” என்பதற்கு முன் “0” (சைபர்) போட்டிருக்கிறேன். தாங்கள் கடவுளாதலால் ஸ்டாம்பு ஒட்டாமல் கடிதம் போட்டிருக்கிறேன். ஒரு வேளை வானுலகத்தில் தபாற் பில்லைகள் இருந்தால் அனுப்பி வைக்கவும். இந்த கடிதத்தை நான் ஸ்டாம்பு ஒட்டாமல் போட்டிருப்பதற்காக இங்குள்ள தபாலதிகாரிகள் “நாட் பெயிட்” போட்டுத் தங்களிடம் “சார்ஜ்” வசூலிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் ஒருகால் அப்படி கேட்கப்பட்டால் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். முதலில் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட்டேனாதலால் இனி நான் இந்த கடிதம் எழுதப் புகுந்ததின் காரணம் என்ன என்பது பற்றி விவரமாக எழுதப் புகுகிறேன்.

தங்களைப் பற்றியும், தங்கள் பிள்ளை குட்டிகளைப் பற்றியும் இங்குள்ள புராணங்கள் வாயிலாகவும் நடத்தப்படும் நாடகம், சினிமா, பிரசங்கங்கள் முதலியன மூலமாகவும் அதிகமாகக் கேட்டும் படித்தும் பார்த்துமிருக்கிறேன். ஆனால் தங்களாலும், தங்கள் குடும்பத்தினர்களாலும் செய்யப்பட்டதாகக் கூறப்படும் திரு வரலாறுகளைச் சிறியேன் நம்புவதற்கு இயலாத புத்தியுடையவனாயிருக்கிறேன். ஏனென்றால் ஒன்றுக்கு, மற்றொன்று முரண்பாடானதாகவும், நம்பத்தகாததாகவும் அறிவிற்கோ, ஆராய்ச்சிக்கோ நேர் நோக்குக்காகவோ, யுக்திக்காகவோ ஒப்புக்கொள்ளத் தகாதனவுமான திருவிளையாடல்களைத் தாங்கள் செய்திருப்பதாகவே எனக்குச் சந்தேகமுண்டாகிறது. நான், ஐயங்கொள்வது சரியா அல்லவா என்பதைத் தங்கள் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டே முக்கியமாக இந்தக் கடிதத்தை எழுதினேன்.

நான் இவ்வாறு சந்தேகப் பேர்வழியாயிருப்பது பற்றித் தாங்கள் வருந்தினால் அல்லது இரங்கினால் அதுவுமில்