பக்கம் எண் :

168

லாவிடில் கோபித்துக் கொண்டால் அதற்கு நான் ஜவாப் தாரியாக முடியவே முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கொள்ளவே செய்வேன். நான் சந்தேகப் பேர் வழியாய் இருப்பதற்குக் காரணம் என்னைப் படைத்தவரும், இயக்கி வருபவருமான தங்களுடைய செயலே காரணம் என எல்லாம் தெரிந்தவராகிய தங்களுக்குக் கூடவா கூறவேண்டும்? அதுவுமில்லாமல் தாங்கள் மக்களின் மாபெரும் பிதாவாகிறீர்களாதலால் தங்கள் குழந்தைகளில் ஒருவராகிய நான் தெரிந்தோ தெரியாமல் பிழை செய்து விட்டாலும் அதைத் தாங்கள் பொருட்படுத்தவும் கூடாது. சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டிய பொறுப்பும் தங்களுக்குண்டு. என்னுடையவும் இதர ஜீவர்களுடையவும் நலத்தைக் கோரியே தாங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறபடியால் தாங்கள் என் வேண்டுகோளை நிராகரிக்க முடியாது. இவ்வளவு ஏன்? தாங்களே எனக்குள்ளிருந்து இந்த மாதிரி எழுதுமாறு செய்து விட்டிருக்கிறீர்களாதலால், எனது ஐயப்பாட்டை அகற்றி வைப்பீர்களென்றே நினைக்கிறேன். கீழே நான் குறிப்பிடப் போகும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அர்ஜண்டாகப் பதில் எழுதும்படி மேலும் ஓர் கும்பிடு போட்டுக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

முதலில் நான் கேட்க விரும்புவது என்னவென்றால் தங்களுக்குச் சர்வ வல்லமை உண்டு என்று சொல்லப்படுவதும் உண்மையா, அல்லவா என்பதே யாகும். தங்களுக்குச் சர்வ வல்லமை உண்டு எனக் கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்படி நம்புவதற்கு பலகாரணங்கள் காட்ட முடியுமானாலும் சுருக்கமாக இரண்டொன்றை குறிப்பிடுகிறேன். தங்களுக்கு சர்வ வல்லமை படைத்திருந்தால் என்னை சந்தேகப் பேர்வழியாகப் படைத்திருப்பீர்களா? அருச்சுனன் கை அம்பால் அடிபட்டிருப்பீர்களா? தங்கள் பெண்சாதியை ஓர் சமயம் இராவணனுக்கு கூட்டிக் கொடுத்திருப்பீர்களா? தங்களை எதிர்க்கும்