கடவுள்களையும், மக்களையும் மதங்களையும் படைக்கவோ படைத்தோ இருக்கவிட்டிருப்பீர்களா? மக்களை பல்வேறு தோற்றங்களை உடையவர்களாகவும், குணஞ்செயல்களை உடையவராகவும் படைத்து அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்களா? தங்களை நம்பாத மக்களை தாங்களே தங்களை நம்பும்படி செய்யாமல் ஆத்திகர்களைக் கொண்டும், புராணங்களைக் கொண்டும் நாயன்மார்களைக் கொண்டும் நம்பும்படிச் செய்வீர்களா? தங்கள் சர்வ வல்லமையை பிறர் மூலமாக விளம்பரம் செய்ய விடுவீர்களா? சுருக்கமாக ஒரே வார்த்தையில் கூறிவிடுவதெனில், “தங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே உலகம் இயங்கும்” படி செய்துவிட்டிருப்பீர்கள். பலவாறான குளறுபாடுகளும் “கொலாம்புலாம்” என இருக்கும்படியும் செய்திருக்கமாட்டீர்கள். இன்னும் பலவுளவாயினும் எல்லாம் தெரிந்தவராகிய தங்களுக்கு மேலும் விளக்க வேண்டுமா? வேண்டாம். வேண்டாம். இப்படிப்பட்ட காரணங்கள் இருப்பதாலேயே தங்களுக்கு சர்வவல்லமை இல்லையென நினைக்கிறேன். என்னுடைய சந்தேகங்கள் தவறானதாக இருந்தால் தயை கூர்ந்து அதற்குரிய காரணங்களை மறந்துவிடாமல் எழுதும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். தாங்கள் உண்டாக்கிய மதம் சைவமதம் என்று இங்குள்ள சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமும் எனக்கு மிகுந்த குழப்பத்தையும், வியப்பையும் தடுமாற்றத்தையும் அளித்துக் கொண்டிருக்கிறது. ஏன்? தங்களுடையது சைவ மதம் என்பது உண்மையானால், மேலானதாய் இருந்தால் வேறு 1007 சமீபத்தில் ஓர் பத்திரிகையில் 1008 சமயங்களிருப்பதாக வெளியாகியிருக்கிறது. மதங்கள் உண்டாகி இருக்கக் காரணம் என்ன? சைவமதம் நல்ல மதமாக இருப்பதை எல்லாரும் அறிந்து அந்த மதத்திலேயே இருக்கும்படி செய்யாமல் எதிர் மதங்களைப் படைத்துக் கொள்ளும்படியும் தாங்கள் விட்டுக் கொண்டிருப்பதன் தத்துவம் என்ன? உலகத் |