பக்கம் எண் :

170

திலே ஓர் தேசத்திலே ஒரு சில மக்களே - தற்போது சைவ மதத்தை அநுஷ்டித்து வருகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாமல் இருக்காது. பெரும்பாலான மக்கள் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மதங்களிலேயே இருக்கிறார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். இவ்வாறு தங்களையும், தங்கள் சைவ மதத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் வேறு மதங்களில் இருப்பதின் காரணம் என்ன என்பதைப் பற்றியும் எனக்கு விஸ்தாரமாக எழுதும்படி மண்டிப் போட்டு வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உலகத்திலுள்ள - ஏன்? மூவுலகங்களிலுமுள்ள எல்லாக் கடவுளையும்விட தாங்களே பெரிய படே - படே கடவுள் என்று இந்தியாவிலுள்ள சிலர் கூறுகிறார்கள். இதையும் என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. தாங்கள் பெரிய கடவுளாக இருப்பது மெய்யானால் சிறிய கடவுள்களும் தங்களுக்குப் பயப்படாத, எதற்கும் - மதிக்காத எதிர்க் கடவுளர்களும் இருப்பதின் பிரமேயம் யாது என்பதைப் பற்றியும் எழுதுங்கள்.

தங்களுடைய அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றியும் எனக்கு அநேக சந்தேகங்களிருக்கின்றன. தற்போது சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் கேட்க விரும்புகிறேன். தங்களுடைய மெய்யான ‘பக்தர்கள்’ எனச் சொல்லப்படும் நாயனார் அடைந்த கஷ்டநஷ்டங்களையும் துன்பங்களையும், பிறவற்றையும் பற்றிச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. தங்களுடைய அரிய பக்தர்களாகிய நாயன்மார்களிற் சிலர் தங்களை நம்பிப் போற்றியதற்காக சிறையிடப்படும்படி தாங்கள் விட்டுக் கொண்டிருந்ததின் காரணம் என்ன? ஓர் நாயனாரைக் கல்லுடன் கட்டிச் சமுத்திரத்திலோ, கடலிலோ, ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீரிலோ, வெந்நீரிலோ போட்டார்களாம்! அவர் தங்களுடைய “பாடிகார்ட்” போன்றவராம். அப்படிப்பட்டவரை இம்சிக்கும்படி நீங்கள் பார்த்துக் கொண்டிருந்ததின் காரணம் என்ன? சில நாயனார்கள்