ஆகவேயிருக்கும் என்பதே என்னுடைய தீர்மானம். விருப்பு, வெறுப்பற்ற வெற்றி வீரராகிய தாங்கள் அப்படிச் செய்திருப்பீர்களா? கேவலம் மயிரையும் மாட்டுச் சாணிச் சாம்பலையும் தாங்கள் விரும்புவதாக இங்குள்ளவர்கள் கூறுவதைத் தாங்கள் இதுவரையில் மறுக்காமல் “பரமண்டலத்தில்” மௌனசாமியாகக் குந்திக் கொண்டிருப்பதுதான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுக்கின்றன. இன்னொரு பெரிய சந்தேகம் உண்டாகிறது. அதாவது தாங்கள் “பர மண்டலத்திலோ” அல்லது வேறு எங்கும் இல்லையோ, எல்லாம் கட்டுக் கதைகள்தானோ என்பதே யாகும். அப்படியிருக்கும் பட்சத்தில் எனக்கு பதில் கடிதம் வராததால் தாங்கள் எங்கும் இல்லை என்பதும் தெரிந்து கொள்வேன். எனவே தாங்கள் எனக்கு விரைவில் பதில் எழுதாவிட்டால், தாங்கள் (பரமசிவன் என ஒரு கடவுள்) இல்லை என நான் தம்பட்டமடிக்க புறப்பட்டுவிடுவேன் ‘அண்டர்ஸ்டாண்ட்?’ ஆம் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! தாங்கள் எவ்வுயிர்க்கும் அன்பாயிருக்கும் இறைவன் என்று சில சைவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தாங்கள் சதா காலமும் “சவாரி” செய்வது மாடு என்று சொல்லப்படுகிறது. மேலும் குழந்தைப் புலால் மீதும் மான்கறி மீதும் தங்களுக்கு அபாரமான ஆவல் உண்டென்றும் தெரிகிறது. இவைமட்டுமல்ல, எத்தனையோ அரக்கர்களையும் இராட்சதர்களையும் வேறு பலரையும் தாங்கள் சம்மாரம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்றே ஊகிப்பதற்கும் இடமில்லாமற்போகவில்லை ஏனென்றால் பொய்க் கூற்றுகளாக இருக்குமானால், தாங்கள் அவற்றை மறுக்கவோ அல்லது அசரீரியாகவேனும் அறிவிக்காமலோ கைலாசத்தில் குந்திக் கொண்டு கஞ்சா அடித்துக் கொண்டிருப்பீர்களா? இருந்தாலும் இப்போது தான் என்ன? எனக்குப் பதில் எழுதினால் எல்லாம் |