பக்கம் எண் :

173

தெரிந்துவிடுமன்றோ! எனவே அவசரமாக எனக்கு எல்லா உண்மைகளையும் எழுதி அனுப்புங்கள்.

தங்களுடைய பக்தர்களாகிய நாயன்மார்களையெல்லாம் தாங்கள் தங்கள் இருப்பிடத்திற்கே அழைத்துக் கொண்டு விட்டீர்களாம். இதையும் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஏனென்றால் தங்கள் பக்தர்களாகிய நாயன்மார்கள் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கும்படி தாங்கள் விட்டிருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். அவர்கள் இங்கே தற்போது இருந்தால் பெண் பனையை ஆண் பனையாக ஆக்கியும் சமணர்களையும், சுயமரியாதைக் கட்சிக்காரர்களாகிய என் சகாக்களையும் கழுவேற்றித் தங்கள் கீர்த்தியையும் தங்கள் இருப்பையும் பிரசித்தப் படுத்திக் கொண்டிருப்பார்கள். ‘கடவுள் இல்லை; சைவம் இழிந்த மதம்’ என்று கூறுகின்றவர்களை எங்கும் உண்டாகவிடாமல் செய்து கொண்டிருப்பார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்து, அதன் மூலமாக சைவ மதத்தை பரப்பிக் கொண்டிருப்பார்கள். தங்களுக்கும், தங்கள் மதத்திற்கும் பக்கத் துணையாகவும் “பாடிகார்ட்” களாகவுமிருந்து பெருந்தொண்டு செய்து கொண்டிருப்பார்கள். இவரையெல்லாம் தாங்கள் கவனித்துப் பாராமல் ரிஷிபாரூட பார்வதி - பாம்பு - எலும்பு சமேதராய்க் காட்சி கொடுத்து நாயன்மார்களையும் அழைத்துக் கொண்டு போய்விட்டது எவ்வளவு பெரிய தப்பு பாருங்கள்.....ஓகோ! ஒருவேளை இதில் ஏதேனும் தத்துவார்த்தம் - உள்நோக்கம் இருந்தாலும் இருக்கலாம்! அப்படி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கடிதத்தில் தெரிவியுங்கள்.

இன்னொரு பெரிய சந்தேகம் எனக்கேற்பட்டிருக்கிறது. அதாவது, அறுபத்து மூவருடன் பெரியபுராணம் சம்பூர்ணமாகி விட்டதுதான். அறுபான் மூவருக்குப் பின்பு ஒரு சிறு நாயனார்கூடத் தோன்றாமலிருக்கும்படி தாங்கள் ஏன் செய்துவிட்டீர்கள் என்பது விளங்கவில்லை. ஒரு கால் அந்த அறுபத்து மூன்று பேருடன் சைவமதமும் பூர்த்தி