பக்கம் எண் :

174

அடைந்து விட்டதா என்பதாகவும் நான் நினைக்கிறேன். தற்போது சைவ மதத்தில் அநேக பெரியார்களிருப்பதாகக் கூறிக் கொள்ளப்படுகிறது. நடுநிலைமையிலிருந்து கவனித்துப் பார்த்தால் முன்பிருந்த அறுபத்து மூன்று நாயனார்களைக் காட்டிலும் பக்தியிலும், நடத்தையிலும் சிறந்தவர்களாக இருப்பதாகக் கூறலாம். இப்படியிருக்கும் போது, இந்தப் பெரியவர்களையும் நாயனார் “ஜாப்தாவில்” தாங்கள் சேர்க்கும்படி செய்யாமல் அல்லது தாங்களே சேர்த்துக் கொள்ளாமல் வாளா (கத்தியல்ல என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்) விருப்பது எனக்குப் பெருத்த வியப்பூட்டுகிறது. எனவே இதைப் பற்றியும் எழுதவும்.

ஒரு காலத்தில் (சரியான வருடம் மாதம் தேதி தெரியவில்லை) இலங்கையை ஆண்டவர் என்று சொல்லப்படும் இராவணன் என்பவர் தங்களை நோக்கிக் கடுந்தவஞ்செய்து அதன் மூலமாகத் தங்களிடம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுக் கொண்டதுடன் தங்கள் சீமாட்டியாகிய பார்வதி தேவியையும் பெற்றுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையானால் தங்களைப் போன்ற கடைந்தெடுத்த மடையர் - ஏமாளி வேறு ஒருவரும் இரார் என்றேதான் சொல்லுவேன். எனவே அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என்பதற்காகவே தைரியமாக எழுதினேன். இருந்தாலும் அதைத் தங்கள் கரத்தாலேயே எழுதி சந்தேகத்தைப் போக்குங்கள். அத்துடன் தங்கள் ஓய்ப் (wife) இப்போது எத்தனை குழந்தைகள் பெற்றிருக்கிறார்? ஆண் எத்தனை? பெண் எத்தனை? நாய்த் தலை, கழுதைத் தலை, பன்றித் தலைப் பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார்களா என்பனவற்றையும் சவிஸ்தாரமாக எனக்கு எழுதுங்கள். அவற்றை மக்களுக்கு விளம்பரம் செய்ய தயாராக இருக்கிறேன்.

நான் ஏன் இப்படிக் கேட்கிறேனென்றால் தங்களுக்கிருக்கும் புத்திரர்களில் ஒருவருக்கு ஆறுமுகங்களிருப்பதாகவும் வேறு ஒருவருக்கு யானைத் தலையிருப்பதாகவும்