உங்கள் சைவர்கள் உரைப்பதனாலேயே யாகும். உரைக்கும் அளவில் நிற்கவில்லை. அதைப்போன்ற உருவங்கள் செய்து பூசித்துக் கொண்டுமிருக்கிறார்கள். இவை உண்மையா? - பொய்யா? என்பது எனக்குப் புலப்படவில்லையானாலும் அதைப்பற்றி ஆட்சேபஞ் செய்யாமலிருப்பதிலிருந்து அநேகமாக அப்படிப்பட்ட தலைகளை உடைய மக்கள் தங்களுக்கு இருக்கலாமென்றே சந்தேகிக்க இடமேற்படுகின்றது. இருந்தாலும் எனக்குச் சந்தேகம் என்னவோ அபாரந்தான். ஏனென்றால் ஓர் தலையுடைய உங்களுக்கு ஆறுமுகப் பிள்ளையும் - யானைத்தலை உள்ள பிள்ளையும் பிறக்குமா என்பதுதான். ஒருவேளை இங்குள்ளவர்கள் தங்கள் மீது செய்திருக்கிற பிழைகள் தங்கள் கண்ணுக்குத் தென்படாமலோ-காதுக்குக் கேட்காமலோ போயிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் தாங்கள் இருப்பது வெகுதூரம் அல்லவா? ஆம்! கடவுளே! அதை உத்தேசித்துதான் இந்த கடிதத்தில் விஷயங்களை நன்றாகவும் பன்னிப் பன்னியும் எழுதியிருக்கிறேன். எனவே இவை பொய்யாக இருந்தால் அதை எனக்கு எழுதுவதுடன் தாங்கள் இனியும் கஞ்சா குடித்துக் கால விரயஞ் செய்யாமல் உடனே எருது வாகனமீதேறி வந்து தக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வருவதற்கு சௌகரியப் படாவிட்டால் ‘பூதகணங்களையாவது, அல்லது ஆறுமுகனையாவது, யானைமுகனையாவது அனுப்பி வைக்க வேண்டியது’ என்று யோசனை கூறுகிறேன். தங்களுக்கென இங்கு அநேக கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். தாங்கள் அவற்றில் வசிப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். இது எனக்குப் பெரிய குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கின்றன. ஏனென்றால் தாங்கள் இல்லாத இடம் ஒன்றும் இல்லை என அவர்கள் சொல்லிக் கொண்டு அதற்கு மாறாகக் கோயில்கள் கட்டியிருப்பது முன்னுக்குப்பின் முரணாகவன்றோ இருக்கிறது? தாங்கள் கோயில்களில் இல்லை என்பதைத் தாங்களும் |