பக்கம் எண் :

178

மையாய் இருக்காதென்றே நான் நம்புகிறேனானாலும் தங்கள் மூலமாக அறிந்து கொள்வது விசேஷம் என்று நான் ஆசைப்படுகிறேன். எனவேஇதன் விவரத்தையும் மறந்து போகாமல் எழுதுங்கள். தங்களுக்கு காளை மாடுதான் வாகனமாம். ஐயோ! மனிதர்கூட அந்த வாகனத்தில் ஏறுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அதுதானா தங்களுக்குக் கிடைத்தது?

தங்களுக்கு நூதனமான ஒரு கண் இருந்ததாம். அந்தக் கண்ணைத் தாங்கள் திறந்தால் உலகமே சாம்பல் ஆகிவிடுமாம்! அந்தக் கண்ணைத் திறந்து தங்கள் மருமகனாகிய மன்மதனை எரித்து விட்டீர்களாம்! இது அபாண்டமான பொய்யாகவே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அப்படிப்பட்ட நெருப்புக்கண் தங்களுக்கிருந்திருந்தால் தாங்களே இருக்கமுடியாதல்லவா? எப்படியிருந்தாலும் மருமகனை எரிக்கவிரும்புவீர்களா? இதைப் பற்றியும் எனக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய இளைய குமாரனாகிய குமரன் மனிதப் பெண்ணாகிய ஒரு மாதைத் திருட்டுத்தனமாகக் கவர்ந்து சென்று கலியாணம் செய்து கொண்டாராம்! இதை நான் எப்படி நம்புவது? மனிதப் பெண்ணைத் தங்கள் மகன் கலியாணஞ் செய்ய ஆசைப்படுவாரா? அப்படியே ஆசைப்பட்டாலும் திருடிக் கொண்டு போக நினைப்பாரா? மனிதப் பெண்களை கலியாணஞ் செய்ய விரும்பினால் அதை சம்பந்தப்பட்ட பெரியோரிடத்தில் ஒரு வார்த்தை கூறினால் கூத்தாடிக் கொண்டு கலியாணஞ் செய்துகொடுக்க முன்வருவார்களே! இந்த விஷயத்தையும் எனக்கு எழுதுங்கள்! தங்கள் மூத்த புத்திரராகிய விநாயருக்கு இன்னும் மணமாகவில்லையாம். இது உண்மையானால், ஒரு வேளை விநாயருக்கு யானை முகமாயிருப்பதால் எவரும் பெண் கொடுக்க முன்வரவில்லையா? மனிதக்கறி மீது தங்களுக்கு அதிக விருப்பமுண்டாம்! என்ன கொடுமையாய் இருக்கிறது. மனிதக் கறிக்கு தாங்கள் இப்படியா வீங்கிப் போய் இருக்கிறீர்கள்? ஒரு வேளை கைலாயத்தில் ஆடு, மாடு ஆகியவற்றின் புலால் கிடைக்கவில்லையா என்றும்