பக்கம் எண் :

179

சந்தேகமாய் இருக்கிறது. எனவே இதையும் தெரியப்படுத்தவும். தாங்கள் ஒருவரிடம் கல்லடியும், மற்றொருவரிடத்தில் வில்லடியும் இன்னொருவரிடம் செருப்படியும் பட்டிருக்கிறீர்களாம்! அப்படியானால் தாங்கள் அடிவாங்குவதில் வீரரா? சேச்சே! அப்படியிருக்காது. இருந்தாலும் இதைப் பற்றிய உண்மையையும் எழுதுங்கள். சுடுகாட்டில் இருக்க தங்களுக்கு மிகவும் விருப்பம் உண்டாம். செத்த பிணங்களைத் தின்பதற்கா என்பது தெரியவில்லை. தாங்கள் பிச்சை எடுக்கும் பாத்திரம் மண்டை ஓடுதானாம். இது என்ன படுமோசமாக இருக்கிறது. எல்லாமிருக்குது பெட்டியிலே; இலைக்கறி கடையச் சட்டியில்லை என்று இங்கு ஒரு பழமொழி வழங்குகிறது. அதைப்போலல்லவா இருக்கிறது தங்கள் செயல்! மண்பாத்திரங்கூட கைலாசத்தில் கிடையாதா ஆண்டவனே! அப்படியிருக்குமானால் நான் மோட்சத்திற்கு வர ஒருபோதும் விரும்பமாட்டேன். தாங்கள் கண்ணப்ப நாயனார் கொடுத்த பன்றிக் கறியை, “அவக் அவக்” கென்று தின்றீர்களாம்! எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்ற தாங்கள் சைவசமயத்தின் கடவுளாய் இப்படிச் செய்யலாமா? இது பொய்யாய் இருந்தால் இருந்தும் அதைப்பற்றியும் எனக்கு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மகன் ஆறுமுகக் கடவுளுக்கு மயில்தான் வாகனமாம். இதென்ன வேடிக்கையாயிருக்கிறது. ஒரு தலை உள்ள மனிதரை தாங்கக் கூடாத மயில் ஆறுதலையுள்ள மனிதனை எப்படித் தூக்கிச் செல்லும் என்பது புலப்படவில்லை! எல்லாவற்றையும் எழுதும்படி பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன். மற்றொரு குமாரனாகிய யானைத் தலையும் பானை வயிறுமுள்ள கணபதிக்குப் பெருச்சாளி வாகனமாம்! தத், தத்! இதென்ன வேடிக்கையாய் இருக்கிறது! யானைத்தலை உடையவரைப் பெருச்சாளி தாங்குமா? அவர் ஏறினால் பெருச்சாளி சட்டினி ஆகிவிடுமே. தாங்கள் உடுப்பது பெரிதும் புலித்தோலாம். பாவம், தங்கள் தரித்திர நிலைக்காக பெரிதும் வருந்துகிறேன். இரங்குகிறேன்! அத்துடன் தங்களுக்கு ஆடைகள் தேவையாய் இருந்தால் நான் “பார்சல்” செய்யத்