நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களும் பெண்கள் உடையவர்கள் என்றும், உடையவர்களாய் இருந்துதான் ஆகவேண்டும் என்றும் நம் சாத்திரம் கூறும். அதாவது - பெண்கள் வெட்கப்படுகிறவர்கள். வெட்கப்பட்டே தீர வேண்டுமாம். பெண்கள் அறிவில்லாதவர்கள்; அறிவிருந்தாலும் இல்லாதவர்களாகவே நடந்து கொள்ள வேண்டுமாம். பெண்கள் அச்சம் உடையவர்கள்; அச்சம் இல்லாத இடத்தும் அஞ்ச வேண்டுமாம். பெண்கள் (பயிர்ப்பு) அசுத்தமுடையவர்கள், அசுத்தமற்றபோதும் அசுத்தமுடையவர்களாய்ப் பாவித்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். இப்படிச் சொல்லும் நமது பழஞ்சாத்திரங்கள் சமூகத்திற்கு இரண்டுவிதத் தீமைகள் புரிகின்றன. தற்காலம் முன்னேற்றமுறாத பெண்களைக் கிணற்றில் தள்ளிச் சௌக்யப்படுத்தச் சொல்லுகின்றன. தற்காலம் அரிதில் கவிகளாகவும் நீதிபதிகளாகவும் நியாயவாதிகளாகவும் வெளிவந்துள்ள பெண்மணிகளையும் பின்னே தள்ளி அவர்களின் பதவிகளையும் பறிமுதல் செய்யச் சொல்லுகின்றன. “மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்டவந்தார் - அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி” (பாரதி) சமூகம் முன்னேற முயல்வது இயற்கை; சாத்திரங்கள் பின்னே இழுக்கின்றன. இதை நினைக்கையில் ராம ராஜ்யம் ஆண் பிள்ளைகளையே பெற்றது, உண்மையாயிருந்து தொலைந்திருந்தால் அதன் பயனாய்ப் பெண்களே இல்லாமற் போக, அதன் பயனாய் இந்தச் சமூகமே மண்ணுக்குள் மறைந்து போயிருக்கும். தொல்லையற்ற பாடு! பெண்கள் துணையின்றி வாழ முடியாத ஆடவர்கள் சொல்வதையும் கவனிப்போம். அவர்கள் என்ன சொல்லு |