பக்கம் எண் :

19

கிறார்கள் என்றால், ஆடவர் துணையின்றிப் பெண்கள் வாழ முடியாதாம்.

இன்னும், மாதப் பூப்பு - கருப்பச் சுமை முதலிய அசந்தர்ப்பங்கள் பெண்கட்கு இருப்பதால் அவர்கள் ஆண்களோடு சமமாவது எப்படி என்று கேட்கலாம். அப்படிக் கேட்க இங்கு நாம் பெண்களே ஆண்கள் என்று சொல்லவில்லையே.

அச்சுக் கூடத்தின் எழுத்துப் பெட்டிகளில் ஓர் ஒன்றும் (1)மற்றோர் ஒன்றும் (1) சேர்த்து பதினொன்று (11) என்பதை உண்டாக்குகின்றன. மற்ற நேரங்களில் இந்த இரண்டு ஒன்றுகளும் வேறு வேலைக்கு உபயோகப்படக் கூடாதா? இரண்டு ஒன்றும் இவ்வாறு உபயோகப்படுவதில் சமம்தானே? அதுபோலவே ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். மற்ற நேரங்களில் உலக காரியங்களில் சமமாகி உழைக்கட்டும். உழைக்க முடியும் என்கிறோம்; ஆணே பெண் என்று சொல்ல வரவேயில்லை.

பழஞ்சாத்திரங்கள் சமூக முற்போக்கிற்குத் தடையாய் இருக்கின்றன. ஆதலால் அவைகளை வழி கூட்டியனுப்பிப் புதியன தேடிக் கொள்வோம் என்றால் முடியாது என்பர். சாத்திரப்படி நடவாதவரும் நடந்துதான் ஆகவேண்டும் என்பதுண்டு. சாத்திரம் என்பது முக்காலே மூன்று வீசம் ஒழிந்தது. மிகுதி வீசமும் ஒழிந்துதானே ஆகவேண்டும். சீக்கிரம் தள்ளித் தொலைத்தால் காலம் மிச்சமாகுமே என்றால் அதுவும் முடியாது. ஆனால் சிறைக்குள் இருப்பவனுக்குத் தகப்பனுடைய திவசம் ஞாபகம் வந்ததுபோல் நிர்ப்பந்த காலத்தில் சாத்திரம் அடியோடு பறக்கும் என்பது மெய். நாணம், மடம், அச்சம், பயிர்ப்புகளைப் பெண்கள் தலையில் முதன் முதல் ஏற்றிய ஒருவனையும் அக்காலத்து அரசன் கழுவில் போட்டிருந்தால் இன்றைக்கு அந்த நான்கும் கடவுள் சொன்ன வேதக் கருத்தாக இரா. ஒத்துவராத சாத்திரங்