பக்கம் எண் :

20

களை அடியோடு தள்ளப் பெரியதொரு நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. பின்னென்ன! நாம் இப்போது கிடுகிடுவென்று வாழ்கின்றோமோ? நாம் சிறையில் கிடக்கின்றோம். அதிலும் சாகக் கூடிய நிலை. பெண்கட்கு இந்திய சமூகம் சமத்துவ நிலையை உண்டாக்கி வேண்டுமானால் சமூகத்தின் கண்ணும் கருத்தும் அந்த வேலை முடியுமட்டும் மற்றொன்றில் செல்லக்கூடாது.

இச்சமூகமானது இந்நாள் மட்டும் தனது கண்ணையும் கருத்தையும் வைகுண்டத்திலும் கைலாயத்திலும் செலுத்திப் பரமசிவனையும், மகா விஷ்ணுவையும் பக்தரை ரட்சிக்கப் பூலோகத்தில் அடிக்கடி அழைத்ததன் பயனாகக் கொழும்புத் துறைமுகம் நிறைய இந்திய மக்கள் நின்று கொண்டு அக்கரையில் சாப்பாட்டை நோக்குகின்றனர். பெண்களின் சமத்துவத்தில் சமூகம் முழுவதும் கவனம் செலுத்தித்தான் பார்க்கட்டுமே. ஆனால் வாயளவில் மாத்திரம் கோட்டை கட்டக் கூடாது.

பெண்கட்குச் சமத்வம் தேடுவது கஷ்டசாத்யந்தான். அதன்பயன் தெரிந்தால் நடந்துவிடக் கூடியது; பெண்களை ஒன்றுமில்லாமல் ஆக்குவது மாத்திரம் மிக்க எளிது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நாலு சுவர்களையுடைய சிறைக்குள் அவர்களைத் தள்ளிவிட்டால் போதும்.

பெண்களைப் பெற்றோர் அப்பெண்கள் ஒருவனுக்கு வாழ்க்கைப்படும் வரைக்கும் தங்களுக்கு அடிமை என்கிறார்கள். தாங்கள் போடும் சாப்பாட்டைத்தான் அப்பெண்கள் சாப்பிட வேண்டும். தாங்கள் தரும் உடைகளைத்தான் அப்பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் கேட்கக்கூடாது. இவ்விஷயத்தில் அடிமைகள் அல்லவென்று சொல்லவில்லை. அப்பெண்களின் ஜீவிய காலம் வரைக்கும் உதவியாயிருக்கும் மாப்பிள்ளை தேடுவதிலும் பெற்றோர் மாத்திரமே அதிகாரம் உடையவர்கள் என்பது சரியன்று. அதுவும் தங்களின் ஏகபோக