41 லௌகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதிகம்
‘லவ்கிகம்’ என்பது ‘லோக’ சம்மந்தமானது, அதாவது இந்த உலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தம் பற்றியது. ‘பரமார்த்திகம்’ என்பது பெரிய பொருள் சம்மந்தமானது. அதாவது இவ்வுலகத்திற்கு அதிகமாக உள்ளது. பெரிய பொருள் அல்லது கடவுளார். அக்கடவுளுக்கும் மனிதனுக்கும் பற்றிய சம்மந்தம் பற்றியது. ஒற்றைக் கண்ணன் ஒரு பக்கமாகப் பார்ப்பது போல் சிலர் பரமார்த்திகம் என்பதை மனித லட்சியம் என்றும் லௌகிகம் ஒன்றுக்கும் உதவாத விசயம் என்றும் சொல்வதுண்டு. இவ்விடத்தில் நன்றாய் ஊன்றி யோசிக்க வேண்டும். மனிதன் உலகில் பிறந்தான். அவர்கட்கு பசி உண்டு. தாகமுண்டு. இவைகட்கு வழிதேட வேண்டும். உடை வேண்டும். இதுபோன்ற பிற தேவைகளும் உண்டு. இவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ஆதரவான ஆள் வேண்டும். ஆட்சி முறை வேண்டும் இவையன்றி இயல்பாக மக்கட்கு இன்பத்தில் நாட்ட முண்டு. பூர்த்தி பெற வேண்டும். இதற்கிடையில் மக்கட்கு எப்படிப்பட்ட உயர்குணங்கள் வேண்டும்? அவைகட்கு மானம் உண்டு. இவை பறிபோகக் கூடாது. ஒரு மனிதன் மனித கோடிகளுக்கும் தனக்குமுள்ள சம்மந்தத்தை அறிவான நிலை அடையவேண்டும். அவன் அறிவு முதிர்ச்சி பெற்ற வண்ண மிருத்தல் வேண்டும். இவையும், இவை |