போன்ற பிறவும் லௌகிகம். இப்படிப்பட்ட லோக சம்மந்தமான விஷயத்தில் மனிதனுக்கு எவ்வளவு கவலை வேண்டியிருக்கிறது? மனித இலட்சியம் என்பது இந்த உலகத்தோடு மாத்திரம் முடிந்து விடாமல் அப்புறத்தேயும் சென்று முடிவாக வைத்துக் கொண்டாலும், எந்த அறிவாளியாவது மேற்சொன்ன லௌகிகத்தின் மனிதனைக் கவலை கொள்ளாமல் அடித்துத் தள்ள நினைக்கலாமா? “பாரமார்த்திகம், பாரமார்த்திகம், பாரமார்த்திகம்! மற்றவை திரணம்” இது பாரமார்த்திகரின் போதனை. பாரமார்த்திகப் போதனை செய்வோர் லௌகிகர்களைப் போலவே உண்டு, உடுத்தி, உறங்கி, இன்பமனுபவித்து, இந்த உலகத்தையே கற்கண்டாக்கித் தின்று விடவும் திட்டம் போடுவதுண்டு. உலகுக்கு வேண்டிய உழைப்பை உழைத்து தனக்கு வேண்டிய உலக போகத்தை அடைய எண்ணும் சுபாவம் மனிதனிடம் போய், பாரமார்த்திகம், பாரமார்த்திகம், பாரமார்த்திகம் என்று ஜெயிப்பார்கள். ‘பெரும்பான்மை மக்கட்கு பாரமார்த்திகம் போதித்து அதனால் அவர்கள் உலக போகத்தை அடையாமல் செய்து அப்பகுதியையும் வயிற்றுக்குள் தள்ளி பெரியதோர் ஏப்பம் இட உத்தேசிக்கிறீர்களா?’ என்று பாரமார்த்திகர்களைக் கேட்டால், ‘பாரமார்த்திகர்கள் கண்டதே காட்சி - கொண்டதே கோலம் என்று நினைக்கிறீர்களே’! என்று உழைப்பாளிகளைக் கேட்பார்கள். இந்த வார்த்தையில் ஏழை மக்கள் தெரியாத்தனமாக நாணிச் சும்மா இருந்து விடுவது உண்டு. பாரமார்த்திகத்தில் நுழைய ஆரம்பிப்பதும் உண்டு. ஒரு சோதனை:- ஏழை மக்களே! உழைப்பாளிகளே! பாரமார்த்திகம் பேசும் கூட்டத்தாரை நீங்கள் பரிசோதனை செய்ய வெளிப்படையான ஒரு வழி உண்டு. உலக சம்மந்தமே உதவாது என்று எண்ணும் அவர்களையெல்லாம் ஒன்றாக நிறுத்தி நோக்குங்கள். அந்த வரிசையில் எவனாவது உங் |