களைவிட உலக சம்மந்தம் அற்றவன் இருக்கிறானா என்பதைக் கவனியுங்கள். உங்கள் கருத்தை மறைத்து உங்களுடைய சொத்தையெல்லாம் பறித்து ஏராளமாக உண்டதன் பலனாக அவர்கள் யானைகள் போல் கொழுத்து இருப்பார்கள். உங்கள் சாப்பாட்டை திரட்டி சாப்பிட்ட அவர்கள் அச்சாப்பாட்டுக்கு ஜீரணம் ஆக வேண்டிக் குண்டுக் கழுதைகள் திண்ணையில் புரளுவதைக் கண்டதில்லையா? பாரமார்த்திகம், கடவுள் விஷயம் வாழுகிற வீட்டின் கூரையில் சாக்குருவி கத்துகிறது. இந்த உலகம் பொய், இந்த உலகம் கனவு, பெண்கள் மாயை, வாழ்வு பொய், இளமை நீரில் குமிழி, அனைத்தும் ஒருவிதத் தோற்றம்; தமது உடற் தசையின் சன்னங்களை வயலுக்கு எருவாக இட்டு உழைத்துத் தேடியும் ஏழைகளிடம் இதை எல்லாம் சொன்னால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள் அல்லவா? ஆட்டின் ஈரலை வாயில் கடித்துக் கொண்டு கோரா வேசத்துடன் மனிதன் அங்காளம்மனுக்கு செய்யும் தொண்டு பாரமார்த்திகமா? இல்லையென்றால் இந்த ஏற்பாட்டிற்குக் காரணம் யார்? பாமர மக்களைப் பாரமார்த்திகம் செய்துள்ளதும், பாரமார்த்திகத்தால், பாமர மக்கள் இந்நாள் மட்டும் அடைந்ததும் நிற்க, படித்தவர் எனப்படுவோரும் மதத் தலைவர் எனப்படுவோரும் அனுசரிக்கும் பாரமார்த்திகமானது சாக்கடையில் ஓடும் பெருச்சாளியின் வாயிலிருந்து அதன் முதுகிலோடி அங்கிருக்கும் விநாயகர் அவர் தம்பி மற்றும் சொந்தக்காரர்களிடம் சென்று பிறகு ஆகாசவாணம் போல் மேல் நோக்கிக் கிளம்புகிறது! ஆரம்பத்திலாவது திடீரென்று மேலே கிளம்பலாகாதா? சென்றால் உலக மக்களின் பணம் கோயிலுக்கென்றும், கோயில் தரகர்களுக்கென்றும் கோடிக்கணக்கில் அனுதினமும் செலவு அழியாதே! கோயில், மற்றும் மதகர்த்தர்களின் ஏற்பாடுகளெல்லாம் பாரமார்த்திக |