42 திரு. உமாமகேஸ்வரம் பிள்ளை உள்ளக் கிளர்ச்சி
அண்ணாமலை சர்வ கலாசாலைத் தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழாவானது சமீபத்தில் சர்வகலாசாலைக் கட்டிடத்தில் திரு. டி. சிவராம சேதுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றதாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு உமா மகேஸ்வரம் பிள்ளை ‘தமிழும் சர்வகலா சாலைகளும்’ என்பது பற்றிப் பேசினார்களாம். அப்பிரசங்கத்தின் சாராம்ஸத்தைத் தமிழ்நாடு (7-3-1932) வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வரம் பிள்ளை உரைத்தவற்றில் சிறு பகுதி வருமாறு:- “இச்சர்வ கலாசாலைக்குப் பொருள் உண்டு; இடம் உண்டு; மற்றியாவுமுண்டு. ஆனால் எந்த உண்மை நோக்கோடு சர்வகலாசாலை துவக்கப்பட்டதோ அதைத்தான் காணோம்” கரந்தைப் புலவர் நன்று கூறினார்கள்! தமிழ் நாட்டில், தமிழர் நலத்திற்குத் தமிழர் பணத்தினால், தமிழ் வளர்ப்பதன் மூலமாகத் தமிழரைப் பல்கலை வல்லுநர் ஆக்கவே அண்ணாமலை பல்கலைக் கழகம் ஏற்பட்டிருக்க வேண்டும். நோக்கம் வேறொன்றாதல் இல்லை. ஆயினும், தமிழ் நாட்டில், தமிழர் பணத்தினால் பல்கலைக் கழகம் கண்டதின் மூலமாகத் தமிழை மறைத்து விடவே காரியம் நடைபெறுகிறது. ஐயம் ஒன்றும் இன்று. என் செய்வது! கரந்தைப்புலவர் மேலும் கூறி வருந்துவது பின் வருமாறு:- |