பக்கம் எண் :

190

நான் ஆகாயத்தில் தூக்கப்பட்டேன்; சிந்தனையுலகில் இறக்கி விடப்பட்டேன்.

அந்த சிந்தனை உலகில் என் கண்ணெதிரில் அழகிய ஜெர்மனி தோன்றியது. அதில் நாலா பக்கத்திலும் உலவிக் கடைசியில் பரந்த மைதானம் ஒன்றை அடைந்தேன். அந்த மைதானத்தில் இரண்டு பட்டாளங்கள் எதிர் எதிர் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தேன். ஒன்று கத்தோலிக்கப் பட்டாளம்; மற்றொன்று பிராட்டஸ்டண்ட் பட்டாளம்.

பிராட்ட்ஸ்டண்டு பட்டாளம் கீழ்வருமாறு தமது ஆரம்ப ஆயுதப் பிரயோகம் செய்தது.

எங்கள் இண்டன்பர்க்கு வெற்றியடைய நீங்கள் எதற்காகப் பிரார்த்தனை செய்தீர்கள்? எங்கள் இண்டன்பர்க்கு வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபின் அவனை வளைப்பதற்காக இந்த ஏற்பாடோ? கத்தோலிக்கரான ஹிட்லர் வெற்றியடைய அல்லவோ நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர் தோல்வியடைவது நிச்சயம் என்று தெரிந்ததும் அவரை புறக்கணித்தீரோ?

கத்தோலிக்கர்:-

எங்கள் ஹிட்லர் வெற்றியடையக்கூடும் என்று நீங்கள் முன்னரே அறிந்தாலும் உங்கள் பிராட்டஸ்டண்டு இண்டன்பர்க்கைப் புறக்கணித்து ஹிட்லரைத்தான் ஆதரித்து பிரார்த்தனை செய்வீர்கள் என்றார்கள்.

இதற்கிடையில் ‘மூடர்களே, மூடர்களே’ என்ற இனிய வார்த்தைகள் இரு பட்டாளத்தின் நடுவிலிருந்து கிளம்பின. ஓர் வாலிபத் திருமேனி அங்குத் தோன்றிற்று!

திருமேனி பின்னும் சொல்லுகிறது:- நான்தான் சேசுநாதர் என்றே நம்புங்கள்! ( ‘ரக்ஷகரே’, ரக்ஷகரே’ என்று இருதரத்தாரும் வணங்கினார்கள்)