பக்கம் எண் :

191

நான்தான் அறிவற்ற காலத்தில் மதம் போதித்தேன் என்று நம்புங்கள் ( ‘ரக்ஷகரே’, ரக்ஷகரே’ என்று வணங்கினார்கள்)

மக்கள் அறிவற்றிருந்த காலத்தில் ஏதேதோ விஷயங்களைச் சொல்லி அவைகளை நம்பச் சொன்னேன். ஆதலால் அப்போது மதம் என்ற ஓர் பலத்தின்கீழ் மனிதர் அடிமைப்பட்டதன் மூலம் முன்னேற்றமடைந்தனர். அறிவு பெருகிய இக்காலத்தில் மனித பலத்தின் கீழ் எம்மதமும் ஒழிவதன் மூலமே அறிவு பெருக வேண்டும். முன்னேற்றமடைய வேண்டும். மதம் சொன்ன காலத்திய முன்னேற்றமானது ஒரு தனிப்பட்ட சமூக முன்னேற்றமென்பது உலக முன்னேற்றமாகும். ( ‘ரக்ஷகரே’, ரக்ஷகரே’ என்று வணங்கினார்கள்)

ஆகையால் மதங்களை மனத்திலிருந்து ஒழியுங்கள். மத ஸ்தாபனங்களை ஒழியுங்கள். மதச் சின்னங்களையெல்லாம் ஒழியுங்கள். மதங்களுக்குரிய அடையாளங்களையெல்லாம் ஒழியுங்கள்.

மதத்தை ஆதாரமாக உள்ள அந்தந்த ஸ்தாபனங்கட்குள்ள பணத்தையெல்லாம் திரட்டி உலக மக்கட்குப் பொதுவாக்குங்கள்.

கத்தோலிக்கரில் ஒருவன்: ரக்ஷகரே, கத்தோலிக்க ஸ்தாபனங்களின் பணத்தையெல்லாம் கத்தோலிக்கர்கட்குத்தானே பங்கிட வேண்டும்.

ரக்ஷகர்:- வடிகட்டிய முட்டாளேமதப் பிரச்சினை தீர்ந்தபின் மக்கள் சமந்தானே!

பிராட்டஸ்டண்டுகளில் ஒருவன்:- ரக்ஷகரே, எங்கள் சக்கரவர்த்தி பிராட்டஸ்டண்டானபடியாலும், நீங்கள் பிராட்டஸ்டண்டுகளுக்கு அதிக அநுகூலரானதாலும் உங்கள் கிருபையால்தானே அவர் அந்தப் பதவியடைந்தார். அவரால் ஆன நன்மைகளை நாங்கள்தானே அடைய வேண்டும்!