பக்கம் எண் :

192

ரக்ஷகர்:- அட, திப்பியைப் பற்றும் பன்னாடையே, அவன் பிராட்டஸ்டண்டு என்ற காரணத்தால் நான் அருள் புரிந்ததுமில்லை. சமதர்ம விரோதமாக நான் எந்தக் கூட்டத்திற்கும் எந்தக் காரணத்தாலும் கிருபை செய்வதில்லை. மதம் ஒழிந்தபின் “உங்கள் சக்ரவர்த்தி” என்பதற்கு அர்த்தமேயில்லை.

முற்காலத்தில் இறந்து போனதாகச் சொல்லப்படும் சேசுநாதர்தான் இவர் என்று ஒரு பொய் சொல்ல வாயெடுத்தேன். உதடு சுரீர் என்று பற்றியது.

வாயிலிருந்து சிகரெட் எரிந்து வந்து உதட்டைப் பொசுக்கியதும் சிந்தனையுலகிலிருந்து தள்ளப்பட்டேன். நான் மல்லாந்து படுத்திருப்பதையும், கையில் தினசரி வைத்திருப்பதையும், பெண்டு பிள்ளைகள் பக்கத்தில் மூட்டைப் பூச்சியால் நெளிவதையும் அறிந்தேன், கோழியும் கூவிற்று.

புதுவை முரசு, 21.3.1932

*