44 அம்மியும் நகரும்!
‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ அல்லவா? சுயமரியாதைக்காரர் கூச்சல் வீணாகுமா? இதுவரைக்கும் வீணாயிற்றா? சுயமரியாதை இதுகால பரியந்தம் என்ன செய்துவிட்டது என்று கேட்பவர் சுயமரியாதைக்காரரின் விரோதிகள் என்பதும் கண்டோமல்லவா? மேலும் நமதியக்கத்தை எதிர்க்கும் பல பத்திரிகைகளின் சுயமரியாதைச் சாயையுடையனவாக ஆகிவருதலை அறிஞர் நுணுகி அறிவாரல்லவா? மக்கள் சுபாவத்தின் எதிரொலி சுயமரியாதைக் கூச்சல் என்பது மறுக்கக் கூடியதல்லவே. மக்களின் உள்ளக் கிடக்கை என்னும் நெருப்புக்குச் சுயமரியாதை ஊதுகுழாயாம் என்ற உண்மையைச் சுயமரியாதைக்காரனைவிட ஆஸ்திகர் அதிகமாய் அறிந்துள்ளார். ஆகையாலல்லவா அவர்கள் அடி வயிற்றைப் பிசைத்துக்கொண்டு, ‘ஐயோ!’ என்று அலறுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் ரெயிலில் உட்கார்ந்திருக்கும் ஒருவன், தான் ஏறிப் போகும் ரயிலுக்குச் சக்கரமில்லை என்று சொல்லவே மாட்டான். ஆயினும் மனச்சாட்சியை மறைத்துப் பொய் சொல்ல நினைப்பவன் அவ்வாறு கூறவும் கூடும் அல்லவா? அதுபோலவே ஐந்து புலன்களாலும் சுயமரியாதையையே அடைந்து தன்னில் மாற்றமடைந்துவரும் ஆஸ்திகரும், ஆஸ்திக வால்களும் சுயமரியாதையைப் பொறாமை காரணமாக எதிர்க்கத் |