தான் கூடும்; எதிர்த்து எழுதத்தான் கூடும். எதிர்த்துத் திட்டத்தான் கூடும். நம் கடமை என்ன? அடிமேல் அடி அடிப்பதுதான். புராண கதா காலக்ஷேபம் செய்யும் சுயநலக்காரர்கள் தமது காலக்ஷேபத்துக்கிடையில் சுயமரியாதைக்காரரை இழுத்துப் பேசாவிட்டால் சரிப்படுவதில்லை. ஆயினும் அதே உள்ளத்தில் தமது முட்டாள்தனமும் பிரதிபலிக்கத்தானே செய்கிறது. இதற்கு வருந்தலாமா? நம் கடமை என்ன? அடிமேல் அடிப்பதுதான். புரோகித நாய்கள் சுயமரியாதைக்காரனைக் கண்டு குலைக்காவிடில் திருப்திப் படுவதில்லை. அவர்கள் குலைப்பதின் மற்றொரு புறத்தைத் திருப்பிப் படித்துக் கொள்ளும் சக்தி பொதுமக்களுக்கு இல்லாமற் போகவில்லையே. சங்கராச்சாரிகள் என்பவர்களின் பழைய பேச்சுக்களின் பிரதிகள் இருந்தால் எடுத்துப் பாருங்கள். இப்போது குளறுவதையும் கவனியுங்கள். இப்போதைய பேச்சுக்களில் ‘ஐயோ, எங்கள் கதி அநியாயமாய்ப் போகிறதே’ என்ற மறைபொருள்தான் கிடைக்கும். சங்கராச்சாரி சுயமரியாதைக்கு எதிர்ப் பிரச்சாரம் பண்ணுகிறாரே என்றால், அதனால் என்ன முழுகிப் போய்விட்டது. சாகப் போகிறவன் சத்தம் போட்டுச் சாவதாலும், மறையும் காற்று மாட்டுக் கொட்டிலை இடிப்பதாலும் என்ன பிரமாதம் வந்துவிடப் போகிறது? கூச்சல் அதிகமாகவே இருக்கும்; அதிலும் இன்றைய நிலையில் கூச்சல் மிக்க அதிகமாயிருக்கும். ஆனால் நிச்சயமாய் இந்த அதிகக் கூச்சல் நமது வேலையிற் பாதியைப் பங்கிட்டுக் கொள்ளும். சுயமரியாதையின் புதிய திட்டம் செய்யத் துவக்கியிருக்கும் வேலையின் ஒளிச் சுவாலை கண்ணுக்குப் புலனாகத் துவக்கவில்லை. எதிரிகளின் குமுறல்கள் அதிகமாயிருக்கிறது என்பது சிலர் கருத்து. புதிய திட்டம் துவக்கி வெளிவந்த மறுதினமே செல்வர்கள், புரோகிதர்கள், மடாதிபதிகள் மூளையில் உழவுத் தொழில் நடைபெறுவது மறுக்க முடியுமா? |